லுகோசு பதவிக்கு இன்று முதல் ஆட்சேர்ப்பு » Sri Lanka Muslim

லுகோசு பதவிக்கு இன்று முதல் ஆட்சேர்ப்பு

sucid

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( மினுவாங்கொடை நிருபர் )


அலுகோசு பதவிக்காக, இன்று (11) திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்காக, ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை இலகுபடுத்தும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, இந்தப் பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனைகளைப் பெற்ற 17 கைதிகளின் பெயர்ப்பட்டியல், கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கமையவே, மரண தண்டனைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka