ஏழு இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் » Sri Lanka Muslim

ஏழு இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

arrest-slk.polce

Contributors
author image

எப்.முபாரக்

திருகோணமலை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பி அன்பார் இன்று(10) உத்தரவிட்டார்.

இந்தியாவின் தமிழ்நாடு நாகப்பட்டினம், வேளாங்கன்னி பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் பதினைந்து வயதுடைய சிறுவன் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

குறித்த இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் நேற்றிரவு(9) கைது செய்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துறைமுக பொலிஸார் இந்திய மீனவர்களை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Web Design by The Design Lanka