சம்மாந்துறை: வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல் » Sri Lanka Muslim

சம்மாந்துறை: வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல்

DSC_0276 (1024x680)

Contributors
author image

ஊடகப்பிரிவு

சீன அரசின் நிதி உதவியின் கீழ் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நடு நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை [10.02.2019] சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தனர்.

இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதி ஒன்றையும் திறந்து வைத்தனர்.

Web Design by The Design Lanka