இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க படிமுறை… » Sri Lanka Muslim

இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க படிமுறை…

parliement

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

01. Who drafts the law of the country?

There is the department called the ‘Legal Draftsmen’s Department’. This Department is mandated by the Constitution to draft all the laws of the country.

இந் நாட்டின் சட்டத்தை யார் வரைகிறார்கள்?

“சட்ட வரைவாளர் திணைக்களம்” ஒன்று உள்ளது. இந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தால் சட்டங்களை வரைவதற்கு இத்திணைக்களம் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.

02. Who authorizes laws to be drafted?

The Cabinet of Ministers decides what laws are to be made. Any Ministry which wants a law has to prepare a Cabinet Memorandum setting out the details for the proposed law.

Once the Cabinet approves the memorandum, the Ministry will take the initiative to have the law enacted. The Legal Draftsman is authorized to draft the required legislation and submit it to the relevant Ministry.

இவ்வாறான சட்டங்களை வரைவதற்கு யார் அதிகாரம் அளித்துள்ளார்கள் ?

என்னென்ன சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் அமைச்சர்களின் அமைச்சரவை தீர்மானிக்கும். ஓர் சட்டம் ஒன்றை ஆக்க வேண்டும் என விரும்பும் ஏதேனும் ஓர் அமைச்சு அவ் உத்தேச சட்டம் தொடர்பான விபரங்கள் அடங்கிய ” அமைச்சரவை பத்திரக்குறிப்பு” ஒன்றை தயாரிக்க வேண்டும்.

இவ் “அமைச்சரவை பத்திரக்குறிப்பு” அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், குறித்த சட்டத்தை முன்மொழிந்த அமைச்சு அதனை சட்டமாக்குவதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கும். சட்ட வரைவாளர் திணைக்களம் குறித்து வேண்டப்பட்ட சட்டத்தை வரைந்து அதனை குறித்த அமைச்சிற்கு சமர்ப்பிக்கும்.

03. What is the procedure involved in the drafting of a Law?

* The Cabinet Memorandum and the Cabinet decision authorizing the Drafting of Legislation must be sent to the Legal Draftsman’s Department.

* Several drafts have to be done before a draft is finalized and agreed as between the requesting Ministry and the drafting office.

* The draft has to be sent back to the Cabinet for its approval.

* The Draft is then printed in the Gazette as a Supplement. This is the first occasion on which the public is informed of the proposed Legislation. Until this time the draft is treated as a confidential document.

The Gazetted draft is then sent to Parliament. When a law is to be debated by Parliament; the Gazetted Bill must be printed as a ‘Bill’ by Parliament.

* The Bill is then placed on the Order Paper of Parliament for Debate.

* Once a Bill is debated and passed by Parliament, it has to be certified by the Speaker. It is only then that a Bill becomes an Act of Parliament. A number is assigned to the Act at this stage.

For example an Act can be referred to as ‘The Money Laundering Act, No of 2006’ or ‘The Finance (Amendment) Act, No. 7 of 2006.’

இச்சட்டங்களை வரைவதில் உள்ள நடைமுறைகள் என்ன?

* அமைச்சரவை பத்திரக்குறிப்பும் குறித்த சட்டத்தை வரைவது தொடர்பில் அதிகாரமளிக்கும் அமைச்சரவையின் தீர்மானமும் சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு அனுப்ப்பபடும்.

* பல வரைபுகள் செய்யப்பட்டு கடைசியில் குறித்த அமைச்சால் ஏற்றுக் கொள்ளப்படும் விதமாக இறுதி வரைபு ஆக்கப்படும்.

* பின்னர் அவ் இறுதி வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும்.

* இதன் பின்னர் குறித்த இறுதி வரைபு அரச வர்த்தகமானியில் ஓர் ஓர் பிற்சேர்க்கையாக பிரசுரிக்கப்படும். இதன் மூலம் குறித்த உத்தேச சட்ட வரைபு தொடர்பில் மக்களிற்கு பகிரங்கப்படுத்தப்படும். அதுவரை, இவை இரகசிய ஆவணங்களாக பாதுகாக்கப்படும்.

* பிரசுரிக்கப்பட்ட இறுதி வரைபு பின்னர் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

* பின்னர் குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்படும் பொழுது அது சட்ட மசோதாவாக பாராளுமன்றில் வெளியிடப்படும்.

* அதன் பின் குறித்த சட்ட மசோதா பாராளுமன்ற விவாதத்திற்குப் எடுத்துக் கொள்ளப்படும்.

* குறித்த சட்ட மசோதா விவாத்த்திற்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வெற்றியடையப்பட்டவுடன் அது சபாநாயகரால் அத்தாட்சிப்படுத்தப்படும். அதன் பின் அச்சட்ட மசோதா பாராளுமன்ற சட்டமாக மாறும்.

04. How can a member of the public get involved in the law making process?

As I stated before, the Gazetting of a Bill, makes it a public document. The Constitution requires (Article 78) that every Bill must be published in the Gazette at least seven days before it is placed on the Order Paper of the Parliament.

Within one week of the Bill being placed on the Order Paper of the Parliament it is open to any member of the public to challenge any Bill in the Supreme Court by way of a written petition. No proceedings can be had in relation to such Bill in Parliament until the determination of the Supreme Court is forwarded to the Speaker.

Then the Bill can be debated in Parliament. If the Supreme Court suggests any amendments to the Bill, these have to be incorporated into the Bill before it is debated and passed.

04. ஓர் பொதுஐனம் இச்சட்டவாக்க நடைமுறையில் எவ்வாறு தமது பங்களிப்பை வழங்க முடியும்?

நான் முன்னரே கூறியதுபோல, இறுதி வரைபு வரத்தகமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன் அது ஓர் பகிரங்க ஆவணமாகும். அரசியலமைப்பு சட்டத்தின், உறுப்புரை 78 ன் பிரகாரம் ஓர் குறித்த சட்ட மசோதா பாராளுமன்ற விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 7 நாட்களிற்கு முன்னர், இவ் வரைபு வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என தேவைப்படுத்துகிறது.

* இந்த ஒரு வார காலத்தினுள் குறித்த உத்தேச சட்ட வரைபு தொடர்பில் எழுத்து மூலமான மனு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்வதன் மூலம் குறித்த உத்தேச சட்ட வரைபை கேள்விக்கு உட்படுத்தலாம்.அவ்வாறான மனு மீதான உச்ச நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிற்கு அனுப்பி வைக்கப்படும்வரை அவ் உத்தேச சட்ட வரைபு தொடர்பில் எதுவித நடவடிக்கையும் பாராளுமன்றில் இடம்பெற முடியாது.

* இதன்பின்னர்தான் குறித்த சட்டமசோதா தொடர்பில் பாராளுமன்ற விவாதங்கள் இடம்பெறும். குறித்த சட்ட மசோதாவிற்கு ஏதேனும் திருத்தங்களை செய்யுமாறு உச்ச நீதிமன்று பரிந்துரை செய்யாமாயின், அப்பரிந்துரைகள் அச்சட்ட மசோதாவில் உள்வாங்கப்பட்டு, அதன்பின் அவைகள் தொடர்பான விவாதங்கள் நடாத்தப்பட்டு சட்டமாக்கப்படும்…

Stanislaus Celestine LL.B ( Colombo)
Attorney at Law
The Founder – United Tamil Legal Action Council ( UTLAC)

Web Design by The Design Lanka