துபாயில் விஞர் அபுஹாஷிமா எழுதிய "ரபியுல் அவ்வல் வசந்தம்" நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

துபாயில் விஞர் அபுஹாஷிமா எழுதிய “ரபியுல் அவ்வல் வசந்தம்” நூல் வெளியீட்டு விழா

IMG-20190210-WA0096

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருச்சி

துபாயில் விஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு மற்றும் மற்றும் இலக்கிய பேரொளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹாஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் , மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

துபாய் அமீரகம் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் கவிஞர் அபுஹாஷிமா எழுதிய ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீட்டு விழா மற்றும் அவருடைய இலக்கிய சேவையை பாராட்டு வகையில் அவருக்கு இலக்கிய பேரொளி விருது வழங்கும் விழா துபாய் ரமதா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு தோஷிபா எலிவேட்டர்ஸ் கம்பெனி மேலாண்மை இயக்குநர் மற்றும் சமுதாய செம்மல் ஹாஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் தலைமையில் நடைபெற்றது.விழாவில் காயல்பட்டிணம், என்ஜீனியர் வாவு அபுபக்கர் , நூல் ஆய்வுரையில் கவிஞர் நபி மீது கொண்டுள்ள நேசத்தினை , மற்றும் அவர்களின் மனித நேயகருத்துகளையும் எடுத்துரைத்தார் .

காரைக்கால் இறை மலர் கவிஞர் என். நூர் பாத்திமா வாழ்த்துரை வழங்கினார். ரபியுல் அவ்வல் வசந்தம் நூலை கவிஞர் சீர்காழி தாஜ் அண்ணன் நிணைவரங்கில் நூலை அறிமுகம் செய்து இந்த நூலில் உள்ள பல்வேறு அம்சங்கள் சிறப்பு பற்றி திருகுர்ஆன் ஆய்வாளர் மேலப்பாளையம் ரஹ்மத் ராஜ்குமாரன் , குறிப்பாக எழுத்தாளர்கள் பற்றி குர்ஆன் ௯றுவதை எடுத்து சொன்னார் . கல்லிடைக்குறிச்சி தொழில்அதிபர் முஹையதீன் அவர்கள் கவிஞர் எல்லா தீவிரவாதங்களுக்கும் எதிரானவர், நபிகளார் போதித்ததே சமநிலையும், நல்லிணக்கமே என்றார் . பேராசியர் மன்சூர் அவர்
கள் , இன்றைய கால கட்டத்தில் நல்ல இஸ்லாமிய சமுக விஞ்ஞானிகள் தேவை அப்படிபட்டவர்களாலேயே சிறந்தத்தொரு சமுதாயம் அஅமைக்க முடியும் என பேசினார் . மரியம் கபிர் முஸ்லிம்களில் இன்றைய இளைஞர்கள் எழுதனும் , படிக்கணும் ….நம் சாந்தி நபியினை படிப்பது உன்னதம் தரும் என்றார்.

கவிஞர் அபுஹாஷிமா எழுதிய பெட்டகம், அண்ணலே யாரசூரூல்லாஹ், உத்தம நபியின் உண்மை, தோழர்கள் உள்பட பல புத்தங்களை எழுதியுள்ளார். நமது முற்றம், மாதந்திர சஞ்சிகை ஆசிரியர், சமூக மத நல்லிணக்கத்திற்கு பாடு படும் சமூக அறிஞர் தமிழகம் மட்டுமல்லாமல் அமீரகம் உட்பட உலகின் பல பகுதிகளில் தமிழ் இலக்கிய கவிஞர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர் கவிஞர் அபுஹாஷிமாவுக்கு துபாய் அமீரகம் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய சேவையை பாராட்டு வகையில் இலக்கிய பேரொளி விருதினை வெள்ளம்ஜி இக்பால் , அபுபக்கர் , முதுவை ஹிதாயதுல்லா ,பேராசியர் மன்சூர் , ரஹ்மத் ராஜகுமாரன் , சாதிக், முஹைதீன் பாஷா, அனஸ் , ஆஷிக் முன்னிலையில் பல நூற்றுபேர் கரவொலியு வழங்கப்பட்டது.

விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம். மன்சூர்,
ரஹ்மத் ராஜகுமாரன், கல்லிடைகுறிச்சி முஹம்மது மைதீன், காயல்பட்டினம் வி.எஸ்.எம். அபூபக்கர், ராசல்கைமா தமிழ் சங்க தலைவர் ஜாஹிர் ஹீசைன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், முஹம்மது அனஸ், முஹையதீன் தம்பி, ஆஷிக் ஹபீபுல்லாஹ்,USAதமிழ் சங்க தலைவர் சுபா சீனிவாசன், மரியம கபீர், கோட்டாறு சாதிக், தமிழ் இலக்கிய பேரவை நிர்வாகி கவிஞர் முஹையத்தீன் பாட்சா, திருச்சி பீர் மைதீன், மவ்லான சையது அலி, மற்றும் நாகர்கோவில், கோட்டாறு , இளங்கடை, கன்னியாகுமரி, மேலப்பாளையம், திருநெல்வேலி, உட்பட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டார்கள்.

IMG-20190210-WA0102 IMG-20190210-WA0111 IMG-20190210-WA0099 IMG-20190210-WA0096

Web Design by The Design Lanka