பெண்ணின் நாணத்தை கெடுத்த வழக்கில் சந்தேக நபருக்கு பிணை. » Sri Lanka Muslim

பெண்ணின் நாணத்தை கெடுத்த வழக்கில் சந்தேக நபருக்கு பிணை.

courts

Contributors
author image

S.Ashraff Khan

பெண்ணின் நாணத்தை (வெட்கத்தை) கெடுக்கின்ற வகையில் நடந்து கொண்டார் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் 10000 ரூபாய் காசு பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் சரீர பிணையிலும் சந்தேக நபரை விடுவித்தார்.

சந்தேக நபரை ஆதரித்து சட்டத்தரணி ஐ. எல். எம். ரமீஸ் ஆஜரானார்.

நாவிதன்வெளியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தகப்பனான வயோதிபர் ஒருவரே சந்தேக நபர் ஆவார். இவர் மேய்த்த ஆடுகள் வீடு ஒன்றுக்குள் புகுந்ததை அடுத்து வீட்டுக்கார பெண்ணுக்கும் இவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அப்போதே சந்தேக நபர் பெண்ணின் நாணத்தை (வெட்கத்தை) கெடுக்கின்ற வகையில் நடந்து கொண்டார் என சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டார். இதை அடுத்தே பொலிஸார் சந்தேக நபர் மீது நடவடிக்கை எடுத்தனர்.

Web Design by The Design Lanka