மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவும், பட்டமளிப்பு விழாவும் » Sri Lanka Muslim

மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவும், பட்டமளிப்பு விழாவும்

5-PMMA CADER-02-02-2019

Contributors
author image

P.M.M.A.காதர்

கலாபூஷணம்.பி.எம்.எம்.ஏ.காதர்-


மருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவும்,4வது அல்-ஹாபிழ்; மற்றும் 1வது மௌலவி பட்டமளிப்பு விழாவும் சனிக்கிழமை (2019-02-02)திகதி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.பட்டம் பெற்றோர் மருதமுனை மஸ்ஜிதுல்; கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து விழா நடைபெற்ற மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்நஹ்ழா அறபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில்.கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.அபுஉபைதா மதனி முன்னிலையில் விழா நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

முதன்மை அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி(முப்தி;) கலந்து கொண்டார்.முதன்மைப் பேச்சாளராக ஸம்ஸம் பவுண்டேசனின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.எச்.யூசுப்(முப்தி)கலந்து விஷேட உரையாற்றினார்.அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார்,வலயக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.ஏ.ஜலீல்,எம்.எஸ்.சௌதுல் நஜீம்,அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா,மருதமுனை ஜம்மியத்தல் உலமாசபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹ_சைனுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் அவர்களின் தொகுப்பில் நிகழ்வுகள் ஆரம்பமாகின இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வெள்ளி விழா நினைவு மலரை வெளியிட்டுவைத்தார்.அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி(முப்தி;)6 பெருக்கு மௌலவி பட்டங்களையும், சாண்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். ஏனைய அதி;திகள்;;,22 அல்ஹாபிழ்களுக்கும் பட்டங்களும்,சாண்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர்.

கல்லூரியால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதி;திகள் பரிசுகளையும்,சாண்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.இக் கல்லூரின் முன்னேற்றத்திற்கு பங்காற்றிய ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.கமால்தீன்,பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட்,கல்லூரிஅதிபர்,ஏ.எல் மீராமுகைதீன்,பேராசிரியர் டொக்டர் எம்.எம்.ஜெமீல் சார்பாக அவரது சகோதரர் சுபியான்,அல்றாஜ் உரிமையாளர் எஸ்.எல்.நமுர்றஹ்மான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி,ஏ.எல்.றிபாஸ் உள்ளீட்;ட கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா,பெருளாளர் எம்.ஐ.ஏ.பரீட் ஆகியோருடன் கல்லூரி நிருவாகிகளும், உஸ்தாத்மார்களும், மாணவர்களும், ஊர்பிரமுகர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka