சிறி,ய நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை » Sri Lanka Muslim

சிறி,ய நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை

mai6

Contributors
author image

Presidential Media Division

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வழங்குதல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு


சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேற்று (11) பிற்பகல் பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

இத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று வளர்ச்சியடைந்துள்ளோருக்கே மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தாது வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன் வறுமையிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கு முன்னுரிமையளித்து விரிவான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

புதிய பொருளாதார முறைகளுடன் அரச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்காக வலுவான பயணமொன்றினை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சர் பீ.ஹரிசன், பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்த்தல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.02.11

Web Design by The Design Lanka