சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருட்களை முற்றாக தடை செய்ய பிரதேச சபையில் தீர்மானம் » Sri Lanka Muslim

சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருட்களை முற்றாக தடை செய்ய பிரதேச சபையில் தீர்மானம்

DSC05990

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

எமது பிரதேசத்திலுள்ள சமய ஸ்தலங்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருட்களை முற்றாக தடை செய்ய பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறையை உருவாக்கும் வேலைத்தினை முன்னெடுக்கும் பொருட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாத் ஏற்பாடு செய்த ஊடாகவியலாளர் சந்திப்பு நேற்று சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சமய நிறுவனங்கள், பள்ளிவாசல் நிருவாகம், ஜம்மியத்துல் உலமா சபை, கோவில் நிருவாகம் அனைவரின் வேண்டுகோள்களை உள்வாங்கி எமது பிரதேசத்தில் இன்று பாரிய சவாலாக இருக்கின்ற புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் 5ஆவது அமர்வின் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த அமர்வின் இந்த முயற்சியை பிரதேச சபை, நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, கோவில் நிருவாகம், மக்கள் பிரதிநிகள் ஒவ்வொரு கிராமமாக, கிராம சேவை பிரிவிலும் சகல உத்தியோகத்தர்களையும் உள்வாங்கி முதல்கட்டமாக ஒரு குழுவினை அமைத்து வீடு வீடாக சென்று விளிப்பூட்டல் மேற்கொள்ளுவதுடன், போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களை இனங்கண்டு போதைப்பொருள், மது விற்பனை நிலையங்கள் என்பவற்றை தடைசெய்யவும் பொது இடங்களில் புகைத்தலை முற்றாக தடைசெய்து போதைப்பொருள் வியாபாரத்தை சபையின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டடுள்ளதாகவும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவர் கே.எம்.முஸ்தபா, புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறையை உருவாக்கும் திட்டத்தின் செயற்குழுவின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் தலைமைப்பீட முகாமையாளருமான யூ.எல்.சலீம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஊடகவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள் உள்ளிட்ட சமூகத்தையே ஆட்கொண்டுள்ள புகைத்தல், போதைப்பொருள் பாவனையை சம்மாந்துறையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா சபை, வர்த்தக சம்மேளனம், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊரின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றினைந்து நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

ஆகையால் இவ்வேலைத்திட்டதினை சம்மாந்துறை பிரதேச சபையினால் பொது இடங்களில் போதைப் பொருள் பாவனையை தடுப்பது மற்றும் விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பாகவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka