எங்களுடைய அரசியல் போராட்டம் கூர்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் » Sri Lanka Muslim

எங்களுடைய அரசியல் போராட்டம் கூர்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில்

IMG-20180711-WA0003

Contributors
author image

M.C.Ansar

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் இனவாதம் கூர்மையடைந்து மிகக் கடும் போக்குவாத ஆட்சி அதிகாரப் பரப்புக்குள்ளே இருக்கின்ற சூழலிலேதான் முஸ்லிம்களுடைய கௌரவத்தையும், மானத்தையும், இருப்புக்களையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்ததத்தில் இருப்பதோடு, இன்று எங்களுடைய அரசியல் போராட்டம் கூர்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்த்து கொண்டிருக்கின்றோம். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமூக வலுவூட்டல் அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் க.பொ.த உயர்தர தின நிகழ்வு பாடசாலை அதிபர் யூ.எல். லாபீர் தலைமையில் கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நேற்று(11) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – இன்றும் கூட ஆட்சி அதிகாரப் பரப்புக்கள் இனவாதம், கடும் போக்குவாதம் கூர்மைப்பட்ட வண்ணமேயுள்ளது. முஸ்லிம்களின் அரசியல் ரீதியான போராட்டம் இன்னும் நீங்கவில்லை. மேலும் அதனை கூர்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருப்பதோடு, மாமூல் அரசியலுக்கு மீண்டு விடலாம் என நாம் நினைத்து விடாது மிக விழிப்புடன் செயற்பட வேண்டிய நிலையிலுள்ளோம்.

நாட்டில் இனவாதம் எப்போதே ஏற்பட்டு விட்டது. இனவாத ரீதியான ஆட்சியும், அழுத்தங்களும் எங்கள் மீது திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில்தான் எமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் 1986இல் முஸ்லிம் சமூகத்தின் போராட்ட இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். ஆனால், இன்று முஸ்லிம்களுக்கான உண்மையான அரசியல் இயக்கம் எதுவென்ற தெளிவான பார்வை முஸ்லிம்களுக்கு மத்தியில் இல்லை.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப்போராட்டத்தின் முதுகெலும்பாக முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும்,புத்திசாதுரியத்துடன் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டிருந்தது.

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் பல்வேறு அணுமுறைகளை கையாண்டு வருகின்றது.

எனவே, நாடு இன்று முக்கிய காலகட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் முஸ்லிம்களின் அரசியல் பலம் ஒருமித்ததாக அமைய வேண்டும். எமக்குள் ஒற்றுமையின்மை என்பதே பெரும் சவாலாக முள்ளது. எமக்குள் ஒற்றுமையில்லா விட்டாலும், எமது அரசியல் பலம் ஒன்று பட்டதாக இல்லாவிட்டாலும் நாம் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிய நிலையே ஏற்படும்.

இந்நிகழ்வில் உயர்தர நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக “வெண்முத்து” எனும் சிறப்புமலர் வெளியீடப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, கடந்தகாலங்களில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளை கௌரவித்து நினைவுச் சின்னங்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அகமட் கியாஸ், சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்,ஏ. சபூர்த்தம்பி,சம்மாந்துறை சம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் கட்டத்தரணி எம்.எம்.சகுபீர், சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதி அதிபர் ஏ.எல்.ஏ.சலீம், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Web Design by The Design Lanka