ஒலுவில் விவகாரம்; உயர்கல்வி அமைச்சர் உருவாக்க முனைவது எதனை? » Sri Lanka Muslim

ஒலுவில் விவகாரம்; உயர்கல்வி அமைச்சர் உருவாக்க முனைவது எதனை?

oluvi9

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உயர்கல்வி அமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஸ நேற்றுப் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் மூலம் ஒட்டுமொத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் அதில் கல்விகற்ற, கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணியுள்ளார்.

அமைச்சரின் இந்த கீழ்த்தரமான கருத்துக்களுக்கு களம் கொடுக்கும் வகையிலும் முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் சார்ந்த மக்கள் காங்கிரஸ் கட்சியினை பழிதீர்த்துக்கொள்ளும் வகையிலும் இனவாத ஊடகமும் செய்தியை வெளியிட்டுள்ளது.

மட்டுமல்லாது முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயீலின் பாராளுமன்ற நுழைவினை சகித்துக்கொள்ள முடியாத சில கைக்கூலிகளின் சமூக விரோதச் செயலாகவே மேற்படி குற்றச்சாட்டினை நோக்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கழக வளர்ச்சி பற்றி பேச வேண்டிய அமைச்சர் இனவாத அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தை வேண்டுமென்று கொச்சைப்படுத்த முனைகின்றார். மாத்திரமன்றி கடந்த காலங்களிலும் முஸ்லிம் விரோத கருத்துக்களை மேற்படி அமைச்சர் நல்லாட்சி எனும் போர்வையில் இருந்து கொண்டு வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல. இது அவரது காழ்ப்புணர்ச்சி மற்றும் மிலேட்சத்தனமான இனவாத சிந்தனை என்பவற்றையே காட்டுகிறது.

முன்னாள் உபவேந்தருக்கு எதிரான ஒரே ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதுவும் இன்னும் விசாரணை பூர்த்தி அடையாத, இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு இந்த அபாண்டமான பழியை அமைச்சர் எப்படி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் விமர்சிக்க முடியும்? தன்னையே காறி உமிழும் அளவுக்கு அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளமை மனவருத்தமே.

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்கமான மாணவிகளும், கடின முயற்சி கொண்ட விரிவுரை யாளர்களுமே காணப்படுகின்றனர். அமைச்சரின் இந்தக் கருத்து இங்கு கடமையாற்றும் விரிவுரையாளர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் எல்லோரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்தி இருக்கிறது.

எதற்காக இந்த சோடிக்கப்பட்ட கருத்துக்கள்? இந்த சோடனைகள் ஊடாக அமைச்சர் உருவாக்க முனைவது எதனை? இந்த அமைச்சர் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை காலமும் வந்ததும் இல்லை.
மாணவர்களை இதுபற்றி விசாரித்த தும் இல்லை. பின் எப்படி கருத்து கூறுவது?

முஸ்லிம் அமைச்சர்கள் , இந்த அமைச்சர்
பல்கலைக்கழகத்துக்கு எதிராக முன்வைதுள்ள கருத்து தொடர்பாக விவாதிக்க முன் வரவேண்டும். மாத்திரமன்றி பல்கலைக்கழகம் மற்றும் இந்நாள் உபவேந்தர் இக்கருத்துக்கு தக்க பதிலளிக்க வேண்டும்.

ஷிபான் BM
பழைய மாணவன்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

Web Design by The Design Lanka