முசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு » Sri Lanka Muslim

முசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

மன்னார் முசலி வேப்பங்குளத்தைச் சேர்ந்த நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் என்பவர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் மணல்குண்டு முஸ்லிம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையிலும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தனது பட்டக்கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திலும் பெற்றுக்கொண்டுள்ளார்.அதன்பின்பு புத்தள நகரில் இயங்கும் விஞ்ஞானக் கல்லூரியில் தகவல் தொழினுட்பக்கல்லூரி ஆசிரியராகவும் கடமைபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தெரிவுசெய்யப்பட்ட இலங்கை நிருவாக சேவைத்தெரிவில் பல ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது,கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு இருந்த “சேவை அடிப்படையிலான” வரையறைக்குட்பட்ட பரீட்சையில் தோற்றும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.திறந்த போட்டிப்பரீட்சையினூடாக ஆசிரியர்கள் செல்ல இருக்கும் ஒரே வாய்ப்பாகும்

முசலியைச்சேர்ந்த இருவர் எச்.எம்.மொய்னுதீன், அ.தாஜுதீன் போன்றோர் இலங்கை நிருவாக சேவையின் தரம் 1 ஐப் பெற்று அமைச்சின் செயலாளர்களாக கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.

முசலிக்கு எமது மண்ணைச் சேர்ந்த சமூகப் பிரக்ஞை உள்ள ஒருவர் நிருவாக சேவைக்கு வரவேண்டும் என்ற ஒரு நீண்டகாலக் கனவு இன்று நனவாகி உள்ளது. அல்ஹம்துலில்லிஹ் (முசலி ஜீனியர்ஸ்)

Web Design by The Design Lanka