யாழில் கடமையின் போது உயிர் நீத்த உப பொலிஸ் பரிசோதகருக்கு வீடு » Sri Lanka Muslim

யாழில் கடமையின் போது உயிர் நீத்த உப பொலிஸ் பரிசோதகருக்கு வீடு

s

Contributors
author image

Farook Sihan - Journalist

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் ஆகியோர் யாழிற்கு இன்று (12)விஐயம் செய்துள்ளனர்.

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது போரின் தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சிற்றம்பலம் தவராசாவின் குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீட்டை கையளிக்கவும் வருகை தந்தனர்.

இதன் போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இதே வேளை காங்கேசன்துறை சோதி வீதி தையிட்டிப் பகுதியில் தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சிற்றம்பலம் தவராசாவின் குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீடு இம்மூவரினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இந்த வீடானது யாழ் மாவட்டப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

aaa (2)

Web Design by The Design Lanka