02 சிறுநீரகங்களும் செயலிழப்பு: இச்சகோதரனுக்கு உதவ முன்வாருங்கள் » Sri Lanka Muslim

02 சிறுநீரகங்களும் செயலிழப்பு: இச்சகோதரனுக்கு உதவ முன்வாருங்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹுஸைன்தீனின் (56) சிறுநீரகம் 80 வீதம் செயலிழந்துள்ளதாகவும் அவருக்கு விரைவாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் கண்டி போதனா வைத்தியசாலையின் துறைசார்ந்த விசேட வைத்திய அதிகாரி ஏ.டப்லியு.எம்.வஸீர் சிபார்சு செய்துள்ளார்.

தனியார் வாகனமொன்றின் சாரதியான ஹுஸைதீனின் சம்பளத்திலேயே அவருடைய தாய், மனைவி மற்றும் உயர்தரம், சாதாரண தரங்களில் கல்விபயிலும் மூன்று பிள்ளைகளும் வாழ்கின்றனர்.

ஹுஸைன்தீனின் வருமானம் குறித்த சத்திரசிகிச்சை செலவுகளுக்கு போதியளவில் இல்லை என்பதனாலும் சத்திர சிகிச்சைக்கு அதிக பணம் செலவாகுவதினாலும் நல்லுள்ளம் படைத்தவர்களிடம் இருந்து உதவி கோருகிறார்.

உதவ விரும்புவோர் வங்கி விபரம், மக்கள் வங்கி-கொட்டியாகும்புர 355200110002054 இலக்க கணக்குக்கு வைப்புச் செய்யுமாறு வேண்டப்படுகின்றனர். இவர் பற்றிய மேலதிக விபரங்களை 077 – 6502324 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Web Design by The Design Lanka