ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா » Sri Lanka Muslim

ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா தேசிய கல்லுாாியில் 2018ஆம் ஆண்டில் க.பொ.த. உயா் தரத்தில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்று பல்கலைகழகம் செல்லும் 3 மாணவா்களுக்கு கல்லுாாியின் பழைய மாணவா் சங்கத்தின் 80வது குழு ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபாவினை வழங்கி இம் மாணவா்களது உயா் கல்விக்கு உதவியளித்துள்ளது. மேற்படி வைபவம் கல்லுாாியில் நடைபெற்றது.

இவ் வைபவத்திற்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் கௌரவ அதிதியாக 80வது பழைய மாணவா் குழுவின் போசகா் ஹாருன் அகமட், 80வது குழுவின் தலைவா் இம்தியாஸ் பாருக், அத்துடன் சைபுல் புஹாரி, கல்லுாாி அதிபா் ரீ. அத்ஹான், பிரதி அதிபா் பத்மசிரி, பொதுச் செயலாளா் ஆர்.எம். நவ்சுடீன், கொழும்பு ஹமீத் ஹூசைனியா பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவா் பவாஸ் காதா், பழைய மாணவா் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஹிப்ரு ஜாபீா் , 80வது குருப் பஸ்மின் பாய ஆகியோா்கள் கலந்து கொண்டு பரிசில்களையும் பணப்பரிசில்களையும் மாணவா்களக்கு வழங்கி வைத்தானர்.

80 குழு வருடா வருடம் இக் கல்லுாரியின் கல்வி வளா்ச்சிக்கு சாதாரண தரம் உயா் தரம் புலமைப்பரிசில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளுக்கும் பாரிய பங்களிப்பினை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Web Design by The Design Lanka