டிப்பர் வாகனம் விபத்து: ஒருவர் வபாத் - சாரதி விளக்க மறியலில் - Sri Lanka Muslim

டிப்பர் வாகனம் விபத்து: ஒருவர் வபாத் – சாரதி விளக்க மறியலில்

Contributors
author image

எப்.முபாரக்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றினால் ஒருவரை மோதி மரணமாவதற்கு காரணமாக சாரதியை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் முஹித் இன்று(24) உத்தரவிட்டார்.

காக்காமுனை,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (23) கிண்ணியா சூரங்கால் கற்குழிப் பகுதியில் மோட்டார் சைக்கிலும், டிப்பர் வாகனமும் மோதி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஏ.எம்.இத்ரீஸ் வயது(65) என்பவர் ஸ்தலத்திலே பலியானதோடு,எட்டு வயது சிறுவனுக்கும் கால்கள் முறிந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்கு காரணமாக டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸால் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team