1984 முத‌ல் கிழ‌க்கில் ப‌ல‌ முஸ்லிம்க‌ள் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். » Sri Lanka Muslim

1984 முத‌ல் கிழ‌க்கில் ப‌ல‌ முஸ்லிம்க‌ள் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

Contributors
author image

S.Ashraff Khan

காணாம‌ல் போனோருக்காக‌ வ‌ட‌க்கில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் போராட்ட‌ம் என்ப‌து த‌மிழ் ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌ட்டு காணாம‌ல் போன‌ முஸ்லிம் உற‌வுக‌ள் ப‌ற்றியதாக‌வும் இருக்கும் வ‌கையில் த‌மிழ் முஸ்லிம் க‌ட்சிக‌ள் க‌வ‌ன‌த்தில் எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்று (24) மேலும் தெரிவித்த‌தாவ‌து,

இந்த‌ நாட்டின் யுத்த‌ வ‌ர‌ல‌ற்றில் அப்பாவி ம‌க்க‌ளை க‌ட‌த்திக்கொல்லும் வ‌ர‌லாற்றை ஆர‌ம்பித்த‌து த‌மிழ் ஆயுத‌ போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ளாகும். 1984 முத‌ல் கிழ‌க்கில் ப‌ல‌ முஸ்லிம்க‌ள் ப‌ண‌த்துக்காக‌ க‌ட‌த்த‌ப்ப‌ட்டு காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

அதே போல் 90ல் மிக‌ அதிக‌மான‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள் விடுத‌லைப்புலிக‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் சிறைக‌ளில் அடைத்த‌ன‌ர். பின்ன‌ர் அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று இது வ‌ரை தெரிய‌வில்லை.

க‌ட‌த்த‌ப்ப‌ட்டோர் விட‌ய‌த்தில் வ‌ட‌க்கில் பாரிய‌ எதிர்பு போராட்ட‌ம் முன்னெடுப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்கிற‌து. அதேவேளை க‌ட‌த்த‌ப்ப‌ட்டோர் என்ப‌து அர‌ச‌ ப‌டைக‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌ட்டோரை ம‌ட்டும் க‌ருத்தில் எடுப்ப‌து ஒரு வ‌கை இன‌வாத‌ போக்காக‌வே நாம் க‌ண்கிறோம்.

க‌ட‌த்த‌ப்ப‌ட்டோர் ச‌ம்ப‌ந்த‌மாக‌ முன்னெடுக்க‌ப்ப‌டும் அனைத்து போராட்ட‌ங்க‌ளும் ஒருத‌லைப்ப‌ட்ச‌மாக‌வே உள்ள‌தை தொட‌ர்ந்தும் க‌ண்டு வ‌ருகிறோம். த‌ம‌து த‌மித்த‌ர‌ப்புக்க‌ள் செய்த‌ மிக‌ப்பெரும் க‌ட‌த்த‌ல்க‌ள் ப‌ற்றி அல‌ட்டிக்கொள்ளாத‌ நிலை க‌வ‌லைக்குரிய‌தாகும்.

ஆக‌வே வ‌ட‌க்கில் முன்னெடுக்க‌ப்ப‌டும் க‌ட‌த்த‌ப்ப‌ட்டோர் ச‌ம்ப‌ந்த‌மான‌ போராட்ட‌த்தில் த‌மிழ் இய‌க்க‌ங்க‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றும் பேச‌ப்ப‌ட‌ வேண்டும். அத‌ற்குரிய‌ வாய்ப்புக்க‌ளை த‌மிழ் முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஏற்ப‌டுத்துவ‌தே நீதியான‌தாகும்.

Web Design by The Design Lanka