இதற்கான முக்கிய காரணம் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையாகும் » Sri Lanka Muslim

இதற்கான முக்கிய காரணம் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையாகும்

PHOTO-2019-02-23-23-01-01

Contributors
author image

இக்பால் அலி

மாணவர்கள் சிறந்த கல்விப் பெறுபேறுகளையும் அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்வதற்கு வழிவகை செய்யும் பாடசாலைளுக்கு தங்கு தடையின்றி தேiவான அனைத்து வழங்களையும் நாங்கள் வழங்கி வருகின்றோம். இப்படியான எங்களுடைய பங்களிப்புக்களுடன் வடமேல் மாகாணம் க. பொ. த உயர் தரப் பெறுபேறுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் தற்போது இரு வருடங்களாக இரண்டாம் நிலையில் திகழ்கிறது. இதற்கான முக்கிய காரணம் கெகுணுகொல்ல தேசிய பாடசாலையாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கெகுணுகொல்ல தேசிய பாடசலையில் ரூபா 25 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதியும் இப்பாடசலையில் கடமையாற்றி விட்டு ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் எம். டி. முஸம்மிர் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம். ஆர். சித்தீக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கடந்த 2014 ஆம் ஆண்டு க. பொ. த உயர் தரப் பெறுபேறுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் வடமேல் மாகாணம் எட்டாம் இடத்தில் இருந்தது. அது தற்போது இரண்டு வருடங்களாக இரண்டாம் இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் தசம் கணக்கில் தான் இர்ண்டாம் நிலையை அடைந்துள்ளது. அதற்கான முதன்மையான காரணம் கெகுணுகொல்ல தேசிய பாடசலையாகும்.
இப்பாடசாலையின் அதிபர் ஆவர்.

கெகுணுகொல்ல முஸ்லிம் பாடசாலைக்கு குருநாகல் மாவட்டத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு வழங்காத அதி சொகுசு கதிரைகள் கேட்போர் கூடத்திற்கு வழங்கியிருக்கின்றோம். அதேபோன்று அருகிலுள்ள பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் ஏனைய பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிட்கள் நிலவிய போதிலும் அவற்றையெல்லாம் கடந்து தம் பாடசாலைக்கு ஆசிரியர்களையும் வளங்களையும் பெற்றுக் கொள்ளுகின்ற நிர்வாகத் திறன் அப்பாடசாலை அதிபருக்கு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆளுமைத் திறன் கொண்ட அதிபர் ஒருவரை நான் காணவில்லை. இந்த அதிபர் கடமையாற்றும் பாடசாலைதான் பெரு எண்ணிக்கையிலான மாணவர்களை பல்கலைக்கழகம் நுழைவு அனுமதிக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற பாடசாலையாகும். அதிபர் முஸ்லிம் ஓய்வு பெற்றாலும் அவர் சமூக சேவையில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று நான் நம்புகின்றேன் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். சஹாப்தீன், தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன், வர்த்தக, கைத்தொழில் ,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற அமைச்சசின் மேலதிகச் செயலாளர் எஸ். எல் நஷீர், ரமீஸ் ஹாஜியார் உட்பட பல கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் எம். டி. முஸம்மிர் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

PHOTO-2019-02-23-23-01-01

Web Design by The Design Lanka