பெண்கள் மக்கள் பிரநிதியாகவும் வரல் வேண்டும் » Sri Lanka Muslim

பெண்கள் மக்கள் பிரநிதியாகவும் வரல் வேண்டும்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் 2016-17 ஆண்டுகளுக்கான பரிசளிப்பு வைபவம் கல்லுாாியின் அதிபா் நஸ்ரியா முனாஸ் தலைமையில் கல்லுாியின் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள இருந்த பேராசிரியா் மைத்திரி விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்தி அதிபரினால் வாசிக்கப்பட்டது.

கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டாா். மற்றும் கொழும்பு வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளா்களான மும்தாஜ் பேகம், கல்வியமைச்சின் உதவிக்கல்விப் பணிப்பாளா் திருமதி பிரபா செல்லத்துறை, பிரதி அதிபா்கள் ஆசிரியைகள், பெற்றாா்கள் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவ அங்கத்தவா்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

இப் பரிசளிப்பின் போது வைத்தியத்துறைக்காக களனி பல்கழைக்கழகத்திற்கு தெரிபு செய்யப்பட்ட மாணவி சிபானா ஜவ்பருக்கு கல்லுாாியின் சிறந்த திறமைக்கான விருது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவா்களினால் வழங்கி வைக்க்பட்டது. அத்துடன் சகல துறை சோ் ராசிக் பரீத் விருது தௌபீக் ஆதிலாவுக்கு பெரோஸா முசம்மிலாவினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதி அதிபா்காளான ரஸ்மியா அபுபக்கா், வி.செல்வநாயகம், அக்கீதா நுஹ்மான் ஆகியோரும் பரிசலிப்பு வைபவத்தில் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய பா. ம. உறுப்பினர் முஜீப் ரஹ்மான் –

இக் கல்லுாாியில் 4000 மாணவிகளும், 150 ஆசிரியைகளையும் கொண்டு தலைநகரில் முஸ்லிம்களுக்கென உள்ள ஒரே ஒரு மகளிா் தேசிய பாடசாலையாக முஸ்லிம் மகளிா் கல்லுாாி விளங்குகின்றது. இலங்கையின் அரச தனியாா் நிர்வாகத்தில் 60 வீத மாக பெண்களே உயா் பதவி தொட்டு சாதாரண பதவிகளையும் சேவையாற்றி வருவதை காணக்கூடியாதாக உள்ளது.

பெண்கள் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் கண்டு சிறந்த நிர்வாகிகளாக விளங்குகின்றனா். ஆசிரியா் சேவையிலும் ஆண்கள் பாடசாலைகளிலும் கூட 60 வீதமாக ஆசிரியைகளே உள்ளனா். ஆகவே தான் பெண்கள் தொழில் ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் சிறந்து மக்கள் பிரநிதியாகவும் வரல் வேண்டும். இக் கல்லுாாியில் அதிபராக இருந்த ஆயிசா ரவுப் அவா்கள் கொழும்பு மாநகர சபையில் தேரதலில் வென்று அங்கு மக்கள் பிரநிதியாக பதவி வகித்து கொழும்பு வாழ் மக்களுக்குச் சேவையாற்றியுள்ளாா். தற்பொழுது கொழும்பு மாநகர சபையில் 30 பேர் பெண் மக்கள் பிரநிதிகளாக அங்கத்தவா்களாக உள்ளனா்.

அதே போன்றுதான் எதிா்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபையிலும் அரசு 25 வீதமாக பெண்களுக்கு சா்ந்தா்ப்பம் வழங்க உள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர்களில் 60 பென் பாராளுமன்ற உறுப்பினர்களாவது அங்கத்துவம் வகிக்க வேண்டும். ஆகவே தான் முஸ்லிம் பெண்கள் ஏனைய சமுகங்கள்போன்று கல்வித்துறையில் அரசியலிலும் முன்னேற முன்வருதல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் அங்கு வேண்டிக் கொண்டாா்.

f1 f5 f10

Web Design by The Design Lanka