போர்முரசும், இம்ரான்கானின் சமாதானப் புறாவும் » Sri Lanka Muslim

போர்முரசும், இம்ரான்கானின் சமாதானப் புறாவும்

Modi-Imran

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இந்தியாவின் விமானப்படை விமானி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மனிதாபிமான நடவடிக்கையினால் நேற்று விடுவிக்கப்பட்டார்.

இரு நாடுகளுக்கிடையில் தங்கள் போர் கைதிகளை பரஸ்பரம் விடுவிப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால் சண்டித்தனம் காட்டி தனது அயல் நாட்டை அச்சுறுத்தியதன் பின்பு, தனது விமானத்தையும் இழந்து, கைதியாக பிடிபட்ட தனது விமானியை பொறுப்பேற்பதை போலதொரு தலைகுனிவும், அவமானமும் வேறு எதுவுமில்லை.

பாகிஸ்தான் இந்தியா ஆகியன அணு ஆயுதங்களையும், நீண்டதூர ஏவுகணைகளையும் கொண்ட நாடுகளாக இருந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான இரானுவத்தினர்களையும்,. விமானங்களையும் மற்றும் போர் தளபாடங்களையும் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

ஒரு போரில் வெற்றி பெறுவதற்கு எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. மன வலிமையும் போர் தந்திரோபாயங்களுமே ஒரு வெற்றியை தீர்மானிக்கின்றது.

இந்தியாவின் காஸ்மீர் பகுதியில் நடாத்தப்பட்ட போராளிகளின் தற்கொலை தாக்குதளுக்கு பதில் தாக்குதல் வழங்காது விட்டால் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் பின்னடைவு ஏற்படும்.

அதனால் தனது மக்களை திருப்திப் படுத்தும் பொருட்டு எப்படியும் பாகிஸ்தான் மீது இந்தியா போர்தொடுக்கும் என்றே உலகம் எதிர்பார்த்தது.

அதேபோல் தனது நாட்டு மக்களுக்கும், உலகத்துக்கும் தன்னை ஒரு ஹீரோவாக காண்பிக்க வேண்டிய கட்டாயம் மோடியின் வீஜேபீ அரசுக்கு இருந்தது.

அதனால் அடிக்கடி பாகிஸ்தான் மீது இந்தியா கண்டனங்களையும், அச்சுறுத்தலையும் விடுத்திருந்தது. அத்துடன் போருக்கான ஆயத்தங்களை தாங்கள் மேற்கொள்வதாக காண்பிக்கும் வகையில் போர் ஒத்திகையில் இந்தியாவின் முப்படையினர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

எப்போதும் ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுப்பதென்றால் மிகவும் ரகசியமாகவே அதற்கான போர் ஒத்திகையில் ஈடுபடுவார்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாகவே இந்தியா நடந்துகொண்டது.

கடந்த காலங்களில் இந்தியாவின் அயல் நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் போர்செய்து பல தடவைகள் மூக்குடைபட்ட அனுபவமும், படிப்பினையும் இந்தியாவுக்குள்ளது.

அதனால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்ததாக தெரியவில்லை. தனது நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதற்காக தன்னை ஒரு வீரனாக காண்பித்து ஒரு நாடகம் ஆடவேண்டிய தேவை மட்டுமே மோடி அரசுக்கு இருந்தது.

அதற்காகவே பன்னிரண்டு யுத்த விமானங்கள் பாகிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் பயங்கரவாதிகளின் மூன்று நிலைகள் மீது விமான தாக்குதலை நடாத்திவிட்டு, தங்களது 21 நிமிட இராணுவ நடவடிக்கை மூலம் நூற்றுக்கனக்கான பயங்கரவாதிகளை அழித்துள்ளதாக நாட்டு மக்களுக்கு இந்தியா பொய் கூறி நாடகமாடியது.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தியா கூறியதுபோல் பாகிஸ்தானின் மத்திய பிரதேசத்தில் உள்ள விடுதலை போராளிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பி வருவதென்றால் குறைந்தது 9௦ நிமிடங்கள் தேவைப்படும்.

பலமான விமானப் படையினர்களையும், F-16 போன்ற அமெரிக்காவின் நவீன விமானங்களையும் கொண்டுள்ள பாகிஸ்தான் போன்ற எந்தவொரு நாட்டுக்குள்ளும் எதிரி நாடொன்றின் யுத்த விமானங்கள் தொண்ணூறு நிமிடங்கள் பயணிப்பது சாத்தியமற்ற விடயமாகும்.

ஆனால் தனது எல்லையை தாண்டி சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி சந்தேகத்துக்கு இடமான சில இடங்களில் குண்டுகளை போட்டுவிட்டு தனது நாட்டு மக்களுக்கு மோடி அரசு கதை கூறியுள்ளதே தவிர, உண்மையில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் துணிச்சல் அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இந்தியா போர் முரசு கொட்ட, பாகிஸ்தானோ சமாதான புறாவை பறக்கவிட்டவாறு நடத்திய ராஜதந்திர முன்னெடுப்பானது சர்வதேசரீதியில் இந்தியாவுக்கு தலைகுணிவு ஏற்பட்டு அது உள்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை மண்கவ்வ செய்துள்ளதுடன் சர்வதேசரீதியில் இம்ரான்கானின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.

Web Design by The Design Lanka