தேசிய பாடசாலை முன்னெடுப்புப் பற்றி விளக்குகிறார் இம்ரான் எம்.பி » Sri Lanka Muslim

தேசிய பாடசாலை முன்னெடுப்புப் பற்றி விளக்குகிறார் இம்ரான் எம்.பி

IMRAN

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ள செய்திகள் வெளியானதன் பின்னர் கடந்த சில நாட்களாக முகநூலில் ஒரு தரப்பு என்னை கடும்தொனியில் விமர்சனம் செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் இன்று(11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

நான் மாவட்டம் முழுக்க ஐந்து இடங்களை தெரிவு செய்து அவ்வூரில் உள்ள ஐந்து பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதன் முதல்கட்டமாக கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இதற்காக நான் எந்த பாடசாலையையும் வெட்டி,புறந்தள்ளி மகளிர் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

1. அல் அக்ஸா கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 2015 இறுதியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அப்பாடசாலை ஆசிரியர்கள் சிலர் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரை நாடியதாகவும் அறிகின்றேன். இந்நிலையில் மூன்றாவது நபராக நானும் அதில் புகுந்து குழப்ப விரும்பவில்லை. முதலில் ஆரம்பித்தவரே அதனை தொடர்ந்து எடுத்துச்சென்று முடித்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கிண்ணியா பாலம்,பல்கலைக்கழக கல்லூரிக்கு ஏற்பட்ட நிலைதான் இதற்கும் ஏற்படும்.

2. கிண்ணியாவில் தற்போது தேசிய பாடசாலையாக இருக்கும் KCC ஓர் ஆண்கள் பாடசாலை யாகும், அடுத்ததாக ஓர் பெண்கள் பாடசாலையே தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தமாகும். இந்த வகையிலேயே மகளிர் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன்.

3. எனது அடுத்த இலக்கு தோப்பூரில் ஒரு பாடசாலையை யும், முள்ளிப்பொத்தானை யில் ஒரு பாடசாலையையும், புல்மோட்டையில் ஒரு பாடசாலையையும், திருகோணமலை ஷாஹிரா மகா வித்தியாலயத்தையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதுதான்.

4. அல் அக்ஸா கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம்முயர்த்துவற்கான நடவடிகையில் ஈடுபட்டவர்கள் அதனை என்னிடம் ஒப்படைத்தால் அதனையும் நான் பொறுப்பெடுக்க தயாராகவே இருக்கின்றேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

5. இறுதியாக என்னிடம் எவ்வித பிரதேசவாதமோ, இனவாதமோ இல்லை,நான் தற்போது கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக எமது பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளதனால் இதன் மூலம் எமது சமூகத்திற்கும்,மாவட்டத்திற்கும் இயலுமானதை செய்ய விரும்புகின்றேன் இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும்,ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேன்.என்றார்

Web Design by The Design Lanka