எமது சொந்த காணிகள் மீள கிடைத்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தமது நன்றிகளையும் மகிழ்ச்சியும் பொது மக்கள் தெரிவித்தனர். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி கடந்த மார்ச் 4 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு தற்போது சென்றுள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன் தற்போது சிரமதானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளான வலி.வடக்கு பலாலி கிழக்கு ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும் 120 குழியும் மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும் ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் 155.6 குழியும் அதன் பாதையுமாக மொத்தம் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு தற்போது மக்களினால் சிரமதானம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விடுவிக்கப்பட்ட பகுதியில் மயிலிட்டி துறை வடக்கில் கிராம சேவகர் பிரிவான ஜே-251 சில பகுதிகளும் உள்ளடங்குகிறது.மேலும் மயிலிட்டி கடற்கரையோரமாக விடுவிக்கப்பட்ட மக்களின் காணியில் தென்னங்கன்றுகளை இராணுவத்தினர் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் உள்ள காணிகளில் மயிலிட்டி வடக்கில் வீதியில் ஒருபக்க மக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மற்றைய பக்கம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அத்துடன் இராணுவத்தினர் ஏலவே அங்கு பயன்படுத்திய சில வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் இராணுவத்தினரால் புதிதாக கட்டப்பட்டவை பல அகற்றப்பட்டுள்ளன. » Sri Lanka Muslim

எமது சொந்த காணிகள் மீள கிடைத்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தமது நன்றிகளையும் மகிழ்ச்சியும் பொது மக்கள் தெரிவித்தனர். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி கடந்த மார்ச் 4 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு தற்போது சென்றுள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன் தற்போது சிரமதானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளான வலி.வடக்கு பலாலி கிழக்கு ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும் 120 குழியும் மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும் ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் 155.6 குழியும் அதன் பாதையுமாக மொத்தம் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு தற்போது மக்களினால் சிரமதானம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விடுவிக்கப்பட்ட பகுதியில் மயிலிட்டி துறை வடக்கில் கிராம சேவகர் பிரிவான ஜே-251 சில பகுதிகளும் உள்ளடங்குகிறது.மேலும் மயிலிட்டி கடற்கரையோரமாக விடுவிக்கப்பட்ட மக்களின் காணியில் தென்னங்கன்றுகளை இராணுவத்தினர் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் உள்ள காணிகளில் மயிலிட்டி வடக்கில் வீதியில் ஒருபக்க மக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மற்றைய பக்கம் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அத்துடன் இராணுவத்தினர் ஏலவே அங்கு பயன்படுத்திய சில வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் இராணுவத்தினரால் புதிதாக கட்டப்பட்டவை பல அகற்றப்பட்டுள்ளன.

_105902692_twit

Contributors
author image

BBC

இந்தியாவின் பாலக்கோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ங்கே பகிரப்பட்டது? – வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர்

கூற்று உண்மையா பொய்யா? – பொய்

Presentational grey line

ஒரு வாட்ஸ் அப் அரட்டையில் இந்தியாவின் பாலகோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று இந்தியாவில் வைரலாக பரவியது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களை குறிவைத்து இந்தியா விமான தாக்குதலை நடத்தியது.

வாட்ஸ் அப் சாட் ஒன்றில் ஒரு இந்தியருக்கும் அவரது பாகிஸ்தான் நண்பர் எனக்கூறப்படும் மருத்துவர் லிஜாசுக்கும் உரையாடல் நடந்ததாக கூறப்படும் ஸ்க்ரீன்ஷாட் வைரலாக பரவியது.

அதில் பாலகோட்டின் மருத்துவ பல்கலைகழகத்தைச் சேந்த ஒரு மருத்துவர் விமான தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்தாகவும், மேலும் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்துவது போன்றும் அந்த வாட்ஸ் அப் சாட்டின் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளது.

அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளதென்ன?

முதல் நபர் – என்னது இது? இந்தியாவின் விமான தாக்குதல் உண்மையா அல்லது ஊடகங்களால் பொய் சொல்லப்படுகிறதா?

மற்றொரு நபர் – இந்திய விமான படை பாலக்கோட்டில் நுழைந்தது. ஆனால் கட்டுப்பாட்டு எல்லைகோடு பகுதியை தாண்டுவது தவறானது.

முதல் நபர் – ஆம். 12 விமானங்கள் நுழைந்துள்ளன. ஆனால் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தாக்கினால் இந்தியா உரிய பதிலடி கொடுக்கும். உங்களுக்கு எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரியுமா?

மற்றொரு நபர் – உள்ளூர் மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. தீவிரவாதிகள் தான் கொல்லப்பட்டனர். அவர்கள் எங்களுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

அந்த அரட்டை இவ்வாறு நீள்கிறது. இந்த ஸ்கிரீன் ஷான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

இந்த அரட்டை குறித்த ஸ்க்ரீன்ஷாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவலை கூறியதை கிட்டத்தட்ட ஒத்திருக்கின்றன.

இருப்பினும், இந்திய விமான படை தலைவர் பி எஸ் தானோயா கூறுகையில், ”எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை எண்ணிக்கொண்டிருப்பது விமான படையின் வேலையல்ல” என்றார்.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

இந்திய அரசு இதுவரை எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து ஒரு அறிக்கையையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

இந்த வாட்ஸ் அப் செய்தி உண்மையா பொய்யா?

இந்த வாட்ஸ் அப் செய்தியில் பாலக்கோட்டில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் அரட்டையில் ஈடுபட்ட நபரின் தாய் பாலக்கோட் மருத்துவ பல்கலைகழகத்தின் தலைவராக இருப்பதாக இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள மோதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் சேகர் சாஹல் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதிலிருந்து இது போலி செய்தி என்பது தெரியவருகிறது. பாகிஸ்தானின் பாலகோட்டில் எந்த மருத்துவப் பல்கலைக்கழகமும் இல்லை.

பாலக்கோட் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மனெஷ்ரா மாவட்டத்தில் குன்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் இப்பகுதி இஸ்லாமாபாத்தில் இருந்து தோராயமாக 160 கி.மீ தொலைவில் உள்ளது.

பாகிஸ்தானின் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி பாலகோட்டில் உள்ள மக்களுக்கு அருகே இருக்கக்கூடிய அரசு மருத்துவ கல்லூரி அபோட்டாபாத்தில்தான் அமைந்திருக்கிறது.

பிபிசிக்கு செய்தி வழங்கும் உள்ளூர் செய்தியாளர் மிர்சா அவுரங்செப் ஜர்ரால்தான் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களிடம் பேசிய முதல் நபராவர். பாலக்கோட்டில் எந்த மருத்துவப் பல்கலைகழகமும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

”பாலக்கோட்டில் எந்த மருத்துவ பல்கலைகழகமும் இல்லை. அடிப்படை சுகாதார மையம் மட்டுமே இருக்கிறது. அங்கே ஒரு மருத்துவரும் மிகக்குறைவான மற்ற பணியாளர்களும் உள்ளனர். நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கும் வசதி கூட இல்லை. இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு மனெஷ்ரா மாவட்டத்தின் பாலக்கோட் மற்றும் கர்ஹி ஹபிபுல்லாவிலுள்ள அடிப்படை சுகாதார மையத்துக்கு நாங்கள் சென்றோம். ஆனால் காயமடைந்த ஆள்கள் யாரையும் பார்க்கவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அரை மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில் இந்த மையம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka