கொலம்பியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி » Sri Lanka Muslim

கொலம்பியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி

_105962711_gettyimages-1065310288

Contributors
author image

BBC

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில், விமானி உள்பட, அதில் பயணித்த 12 பேரும் பலியாகியுள்ளனர்.

1930களில் இருந்து தயாரிக்கப்படும் டக்ளஸ் டி.சி-3 எனும் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் அதிகபட்சம் 30பேர் பயணிக்க முடியும்.

plane crash

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த அந்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்கு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இறந்தவர்களை அடையாளம்காணும் பணிகள் நடந்து வருகின்றன.

Web Design by The Design Lanka