கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி சிந்தனைகளும், கருத்துக்களும்" நூலின்அறிமுக விழா » Sri Lanka Muslim

கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி சிந்தனைகளும், கருத்துக்களும்” நூலின்அறிமுக விழா

IMAG2264

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

அஸ்ஸெய்க். நௌபாஸ் ஜமால்தீனின் “கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி சிந்தனைகளும், கருத்துக்களும்” என்ற நூலின் மூன்றாவது அறிமுக விழா அக்கரைப்பற்று மெங்கோ கார்டினில் ஐ.எ.எல்.எம்.நிறுவனத் தலைவர் சிஹார்டீன் ஆப்தீனின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக அஷ்ஷெய்க் எஸ்,எம்,எம்.மசாஹிர் அவர்களும்,கௌரவ அதிதிகளாக எஸ்.எம்.உபைதுள்ளா ஜமாஅத்தே இஸ்லாமி அம்பாறைப் பொறுப்பாளரும், எம்.எச்.எம்.றஸ்மி அக்/அல்-முனீறா.பெ.உ.பா ,அதிபரும்.விசேட அதிதியாக ஆசிரிய ஆலோசகர்.எம்.ஏ.றபீக்கும் கலந்து சிறப்பித்தனர்.

நூலின் முதற்பிரதியை பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார் .தொடர்ந்து பிரதிகளை கல்விமான்கள் பெற்றுக் கொண்டனர்.நூலாய்வினை பன்நூலாசிரியரும்,ஆய்வாளரும் ஆகிய சிராஜ் மசூர் மேற்கொண்டார்.

முஸ்லிம்களின் முழுப்பெரும் முதுசமாகிய கலாநிதி .எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் சிந்தனை வெளியீட்டைக்காண கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற வாக்குக்கொப்ப பல கல்விமான்கள் வருகை தந்ததைக் காண முடிந்தது.

IMAG2255 IMAG2259 IMAG2264 IMAG2270

Web Design by The Design Lanka