தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக் » Sri Lanka Muslim

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்

201903121421205902_Pollachi-abuse-case-shifted-to-CBCID-police_SECVPF

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி டி கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தும் விசாரணை மந்தகதியில் நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினர்.

இதில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளுக்கு தொடர்பிருப்பதாலேயே விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடியின் பெண் எஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வழக்கு விசாரணை குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனை நடத்தப்படும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கப்படும்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களிலிருந்து ஏராளமான போட்டோக்களும், வீடியோக்களும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாமல் மேலும் பலர் சேர்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி, மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்தது தெரிய வந்துள்ளது.

Web Design by The Design Lanka