கனடாவில் வேலைவாங்கித் தருவதாக ரூ. 86.15 லட்சம் மோசடி இலங்கைத் தமிழர் கைது » Sri Lanka Muslim

கனடாவில் வேலைவாங்கித் தருவதாக ரூ. 86.15 லட்சம் மோசடி இலங்கைத் தமிழர் கைது

wallpaper_Canada

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

கன்டாவில்வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த இலங்கைத் தமிழர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த ராஜிரத்தினராஜை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு
செய்தார்கள்.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரத்தின ராஜ் மகள் ராஜு (59). இலங்கை தமிழர். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்காக இளைஞர்களை அனுப்பி வைத்து வந்தார். இதையடுத்து ஏராளமானோர் இவரிடம் பணம் கட்டினர், ஆனாலும் யாரையும் வெளிநாட்டிற்கு வேலைக்காக அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் இவரை தேடி வந்தனர், இதற்கிடையில் கடைக்கு சென்று திரும்பிய ராஜுவை பார்த்த இளைஞர்கள் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு செல்ல முயன்ற ராஜுவை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்டோன்மென்ட் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கை தமிழரான ராஜு கனடாவிற்கு வேலைக்காக அனுப்புவதாக கூறி ரூ.2.50 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கூறினர். மோசடி தொகை அதிகமாக இருப்பதால் இது குறித்து விசாரிக்க மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றபிரிவுப் போலீஸார் ராஜிரத்தினராஜ், அவரது உறவினர் நிர்மல்ராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர். போலீசார் விசாரித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது வருகிறது.

Web Design by The Design Lanka