உண்மையே எப்போதும் வெல்லும் - ராகுல் காந்தி » Sri Lanka Muslim

உண்மையே எப்போதும் வெல்லும் – ராகுல் காந்தி

rahul34545-1552479477

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

உண்மையே எப்போதும் வெல்லும், அந்த உண்மை பிரதமர் மோடியை சிறைக்கு தள்ளும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காத்து பேசினார். பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் வைத்தார்.

ராகுல் காந்தி தனது பேச்சு, நாம் ரபேல் ஒப்பந்தத்தை எச்ஏஎல் நிறுவனத்திற்கு அளிக்க இருந்தோம். ஆனால் மோடி அதை அனில் அம்பானி நிறுவனத்திற்கு அளித்துவிட்டார்.நாம் செய்ததை விட அதிக தொகையில் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு இழப்பை ஏற்பட்டுவிட்டார் மோடி. மோடி ரபேல் ஒப்பந்தத்தில் தனியாக பேரம் நடத்தி உள்ளார் . 30,000 கோடி ரூபாய் பணம் மோடியால் அனில் அம்பானிக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டு இருக்கிறார். உண்மை வெல்லும் என்று என்று திருவள்ளுவர் கூறினார். அந்த உண்மை மோடியை சிறையில் தள்ளும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு பிரச்னையை நாங்கள் போக்குவோம். ஜிஎஸ்டியை மாற்றுவோம். மேட் இன் இந்தியா என்பதை கூட மேட் இன் தமிழ்நாடு எழுத வைக்கும் அளவிற்கு மாற்றுவோம். சீனாவின் பொருட்களை புறக்கணித்து தமிழக பொருட்களை உற்பத்தி செய்ய வைப்போம். தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் சரி செய்யப்படும். குமரி மீனவர்கள் நாளுக்கு நாள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனையை சரி செய்வோம். இந்திய மக்களுக்கான குறைந்த பட்ச ஊதிய திட்டம் கொண்டு வரப்படும்.

திமுக – காங். கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி. வடக்கே பட்டேல், தெற்கே காமராஜர் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கிறது பாஜக. ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். கஜா புயலுக்கு, ஓகி புயலுக்கு கூட நிவாரணம் அளிக்காத அரசுதான் பாஜக அரசு, மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.

விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார். 2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும் கைப்பாவை ஆட்சியாகும்.

கடந்த காலத்தில் திமுக – அதிமுக போட்டியிருந்தது. இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆழுவதை அங்கீகரிக்கமட்டார்கள்.

தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யைதவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன்.

எங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்றுவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறாது.

ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றும், இளைஞர்கள் வேலையின்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார் என்று பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் விமர்சனம் செய்து பேசி வருகிறார். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் 20 நிமிடம் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார். பின் கூட்டணி தலைவர்கள் பேசினார்கள்.

Web Design by The Design Lanka