பிரதியமைச்சரை சந்தித்து பேச்சு » Sri Lanka Muslim

பிரதியமைச்சரை சந்தித்து பேச்சு

IMG-20190313-WA0000

Contributors
author image

Hasfar A Haleem

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களை இலங்கை துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதான ஆகியோர்கள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது இன்று (13) கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. துறை முக ஊழியர்கள் சார் பிரச்சினைகள், துறை முக அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.பி.எம்.முஸ்தபா, எஸ்.எம்.றிபாய் , கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் ஆகியோர்களும் உடனிருந்தார்கள்.

IMG-20190313-WA0000

Web Design by The Design Lanka