ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் 27 ஆவது வருட மாபெரும் விழா » Sri Lanka Muslim

ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் 27 ஆவது வருட மாபெரும் விழா

IMG-20190314-WA0027

Contributors
author image

Junaid M. Fahath

காத்தான்குடி ஸாலிஹ் அல் குர் ஆன் மத்ரஸாவின் அல் குர் ஆன் கற்று வெளியாகும் மாணவர்களின் 27 ஆவது வருட நிகழ்வு வெள்ளிக்கிழமை ( 15) பி.ப 2.30 க்கு மத்ரஸாவின் அதிபர் மெளலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இம் மாபெரும் விழாவில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அல் குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி), சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் மத்ரஸா மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகள், 27 வருடங்களில் அல் குர் ஆன் கற்று வெளியாகி உயர்நிலை அடைந்த பழைய மாணவர்கள் கெளரவிக்கப்படுவதுடன் , சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அதி உயர் கெளரவ விருது வழங்கியும் கெளரவிக்கப்படவுள்ளார்கள்.

இந் நிகழ்வில் 2018 டிசம்பர் மாதத்தில் அல் குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்பட்ட அல் குர் ஆன் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 47 மாணவர்களும் கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Web Design by The Design Lanka