யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு... » Sri Lanka Muslim

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு…

uthu

Contributors
author image

M.J.M.சஜீத்

03 சகாப்த காலமாக யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து வாழ்வாதாரத்தினை இழந்துள்ள கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டுக்குள் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதார அபிவிருத்திற்காக மத்திய மாகாண அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் நீர் இரைக்கும் இயந்திரம், சோளப்பவர்,கால்நடைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் 50 வீதம் பயனாளிகள் பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அமுல் படுத்தி வருவதால் கிழக்கில் யுத்தாலும், இயற்கை அணர்தங்களினாலும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு 50 வீதம் பணம் செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திளை இழந்து வருகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

எனவே மட்டகளப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள கிராம சக்தி கிராமங்களில் வாழும். ஏழைகளுக்கு 100 வீதம் மாணிய அடிப்படையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி காரியாலயத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முதலாவது முன் ஏற்பாட்டு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உதயகுமார் தலைமையில் மட்டகளப்பு கச்சேரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற போது முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண முன் பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவிதர்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி காரியாலய பிரதானி திரு. கீத் சிறி ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு.பள்ளேகம, திரு. ரோஹன மத்திய, மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளு;ம கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் கிராம சக்தி திட்டத்தின் ஊடாக நமது நாட்டிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழும் ஏழை மக்களும் பயன்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இதற்காக கிழக்கு மாகாண மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார பொருட்களுக்கு 100 வீத மாணியங்களை வழங்குவதற்;கு ஜனாதிபதியிடம் விஷேட அனுமதியினை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 165 கிராமங்களில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு நூறு வீத மாணிய அடிப்படையில் பொருட்களை வழங்குவதன் ஊடாக கிராம மட்டத்தில் வாழ்கின்ற ஏழை மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவி புரியலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளிகள் 549, மாணவர்கள் 18245, ஆசிரியர்கள் 1344 பேர்களும் உள்ளனர். கிராம சக்தி திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் 165 கிராமங்களில் அமைந்துள்ள பாலர் பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளையும், கிராம அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கி முன்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளை செய்யவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தின் ஆரம்ப கல்விக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka