கட்டிட அங்குரார்ப்பணமும் நடமாடும் சேவையும் » Sri Lanka Muslim

கட்டிட அங்குரார்ப்பணமும் நடமாடும் சேவையும்

20150303121338_IMG_9483

Contributors
author image

Hasfar A Haleem

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வு இன்று (14) திருகோணமலையில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட பங்கேற்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாட்டில் இடம் பெற்றது.

திருகோணமலை கரையோரத்தில் மரநடுகை திட்டம், 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்வாகக் கட்டிடமும் சுற்றுலா விடுதிக்குமான அடிக்கல் நடுதல், திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் நடமாடும் சேவை மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பிலான திருகோணமலை நகராட்சி மன்றத்தில் கலந்துரையாடல் என்பன இடம் பெற்றன.

பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைக்கான தீர்வினை நடமாடும் சேவையில் வழங்கினர்.
அமைச்சர் பாட்டாலி சம்பிக நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் உட்பட உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Web Design by The Design Lanka