கல்லொழுவை: நூலகத்திற்கு பத்தாயிரம் நூல்களைச் சேர்க்கும் பணி » Sri Lanka Muslim

கல்லொழுவை: நூலகத்திற்கு பத்தாயிரம் நூல்களைச் சேர்க்கும் பணி

IMG-20190314-WA0000

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா, அடுத்த வருடம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, இப்பாடசாலையின் நூலகத்திற்கு பத்தாயிரம் நூல்களைச் சேர்க்கும் பணிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ.எம். நிலாம், ஒரு தொகுதி புத்தகங்களை வித்தியாலய நூலகப் பொறுப்பாசிரியர் மாதவனிடம், கடந்த திங்கட்கிழமையன்று அன்பளிப்புச் செய்தார். அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் உட்பட ஆசியர்கள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

IMG-20190314-WA0001 IMG-20190314-WA0002

Web Design by The Design Lanka