நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் இரு மஸ்ஜித்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனம் கண்டனம். - Sri Lanka Muslim

நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் இரு மஸ்ஜித்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனம் கண்டனம்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மார்ச் 15 வெள்ளிக்கிழமை நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் உள்ள இரண்டு மஸ்ஜித்களில் ஜும் ஆ தொழுகைக்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேட்சிதனமான துப்பாக்கி சூட்டில் சுமார் 49 இஸ்லாமியர்கள் ஷஹீதாக்கப்பட்ட இச் சம்பவத்தை கண்டித்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெறிவிக்கப்பட்டிருப்பதாவது இத் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 49 இஸ்லாமியர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சகோதரர்களாகும்.

உலக வாழ் இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுமத மக்களதும் பாரிய கண்டனத்துக்குள்ளன இந்த சம்பவம் பாரிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த மிலேட்சித் தனமான தாக்குதலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இத் தாக்குதலை மேற்கொண்ட சியோனிச வெறியாளன் ப்ரெண்டன் டர்ரன்ட் (Brenton Tarrant) மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இனவாத தீவிரவாத குழுவினருக்கும் நியூசிலாந்து அரசாங்கம் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் வலியுறுத்துவதாக இவ் ஊடக அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இதே போன்று 1990 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 03 திகதி இலங்கையின் காத்தான்குடியில் இரு மஸ்ஜித்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத பாசிச விடுதலை புலிகளினால் (LTT) துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை இந் நேரத்தில் நினைவூட்டுவதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team