பிரபல ஊடகவியலாளர் ஜனூஸின் தந்தை காலமானார் - Sri Lanka Muslim

பிரபல ஊடகவியலாளர் ஜனூஸின் தந்தை காலமானார்

Contributors
author image

M.S.M.ஸாகிர்

பிரபல ஊடகவியலாளரும் வியூகம் முகநூல் தொலைக்காட்சியின் பணிப்பாளருமான எஸ். ஜனூஸின் தந்தைஆதம்பாவா சம்சுதீன் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 6.00 மணியளவில் காலமானார்.  இவர், மரணிக்கும்போது வயது (61).

5 ஆண்  மற்றும் 02 பெண் பிள்ளைகளின் தந்தையான இவருடைய ஜனாஸா, சாய்ந்தமருது – 03,  பழைய சந்தைவீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் (11) காலை 6.00 மணியளவில் பெருந்திரளானோரது பிரசன்னத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜென்னதுல் பிர்தௌஸ் கிடைக்க வேண்டும் என்று அன்னாரது மஃபிரத்துக்காகநாமும் பிராத்திப்போம்!

Web Design by Srilanka Muslims Web Team