முஸ்லிம்களை நீதியாக நடத்துமாறு தமிழ் தலைவர்களுக்கு புத்திமதி கூற வேண்டும் - Sri Lanka Muslim

முஸ்லிம்களை நீதியாக நடத்துமாறு தமிழ் தலைவர்களுக்கு புத்திமதி கூற வேண்டும்

Contributors
author image

S.Ashraff Khan

 

– சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை


முஸ்லிம்களை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் தமிழ் தலைவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும் என்று கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் தலைவர் வஃபா பாருக் கோரி உள்ளார்.

நியூசிலாந்தில் முஸ்லிம்கள் மீது பள்ளிவாசலில் நடத்தப்பட்ட படுகொலை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் அந்நாட்டு பிரதமர் நடந்து கொண்ட விதத்தை பாராட்டி எழுதிய கடிதத்திலேயே இவர் இக்கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் போன்றோர் இந்நாட்டின் மற்றொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் விடயத்தில் நீதியாகவும் நேர்மையாகவும் நடப்பதில்லை, மாற்றான் தாய் மன பான்மையுடனேயே செயற்படுகின்றனர்,

முஸ்லிம்களை புறம் தள்ளியவர்களாகவே அரசியல் தீர்வை அடைய முயற்சிக்கின்றனர், முஸ்லிம்களின் தேசியம், சுய நிர்ணயம், சுயாட்சி, அரசியல் உரிமை ஆகியவற்றை ஏற்று கொள்ளவோ அங்கீகரிக்கவோ இவர்கள் தயாராக இல்லை, இவ்விடயத்தில் இவர்களுக்கு சர்வதேச சமூகம் கண்டிப்பான புத்திமதியை சொல்ல வேண்டும் என்று இக்கடிதத்தில் கேட்கப்பட்டு உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team