மக்கள் காங்கிரஸின் வழிகாட்டலில் கூட்டுறவு இளைஞர் , வலுவூட்டலுக்கான பதிவு ஆரம்பம்! - Sri Lanka Muslim

மக்கள் காங்கிரஸின் வழிகாட்டலில் கூட்டுறவு இளைஞர் , வலுவூட்டலுக்கான பதிவு ஆரம்பம்!

Contributors
author image

ஊடகப்பிரிவு

!

“கோப்யேஸ் ” கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் தாபனத்தினூடாக அங்கத்தவர் பதிவை உறுதிப்படுத்தும் நிகழ்வு கண்டி பதியுதீன் மஹ்மூத் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் காரியவள கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாட் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸத்தீன் ஆகியோரின் அயராத முயற்சியால் கண்டி மாவட்டத்தில் இந் நிகழ்வு இரண்டாவது தடவையாகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

கண்டி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களின் பூரண பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடை பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக “கோப்யேஸ்” கூட்டுறவு அமைப்பின் தலைவர் றியாஸ் அவர்களின் வழிகாட்டல், பங்கு பற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.

வளவாளர்களாக கலாநிதி சுனில், பஸால் இஸ்மாயில், மற்றும் கூட்டுறவு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சுரேன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி இந்த நிகழ்வில் அலுவலக இணைப்பாளர் சகோதரர் ரூமி, கண்டி மாவட்ட இளைஞர், யுவதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2019-03-25 at 2.36.49 PM WhatsApp Image 2019-03-25 at 2.36.47 PM

Web Design by Srilanka Muslims Web Team