கண்டியில் ஊடக பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim

கண்டியில் ஊடக பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.எல்.எஸ்.முஹம்மத்


இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் கண்டி “நியுஸ் வீவ்” ஊடக நிறுவனம் நடத்திய ஒரு வருட ஊடகப் பாடநெறியை நிறைவு செய்த முதல் தொகுதி மாணவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) கண்டியில் இடம்பெற்றது.

நியுஸ் வீவ் நிறுவனத்தின் பணிப்பாளர் இர்பான் காதர் தலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக் கழக பொருளில் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் விஜய சந்திரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பேராசிரியர் அனஸ், அல்ஹாஜ் பளீல்,விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் உட்பட பாடநெறியின் முக்கிய விரிவுரையாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளை உரிய முறையில் வெளிக் கொண்டுவதன் ஊடாக நிலையான சமூக அபிவிருத்தியை நோக்கிப் பயணிப்பதை இலக்காக் கொண்டு பிராந்திய ரீதியில் திறமையான இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் பணியை கடந்த பல வருடங்களாக கண்டி நியுஸ் வீவ் ஊடக நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒர் முக்கிய அங்கமாகவே தமிழ் மொழி மூலமான இவ்வூடக சான்றிதழ் பாடநெறியும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் நியுஸ் வீவ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாட நெறியை முதற்கட்டமாக இருபது மாணவர்கள் பூரணமாக நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

இதன்போது நியுஸ் வீவ் நிறுவனத்தினால் இப்பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களின் ஊடகத் திறமைகளை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் நோக்குடன் “கண்டி டைம்ஸ்”என்ற பெயரில் ஓர் இணைய தளம் ஒன்றும் அங்கூரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியரும் மேற்படி பாடநெறியின் முக்கிய இணைப்பாளருமான பைரூஸ் அவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில்

பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் அதிகரித்துள்ள இக்காலப் பகுதியில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் மிகப் பெரியது.

அவர்கள் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக மாத்திரமே தமது எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும்.ஊடகப் பணியை எந்த நேரத்திலும் எமது சொந்த நலன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்த முன்வரக் கூடாது.ஊடக தர்மங்களையும் பொதுச் சட்டங்களை நாம் எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும்.
தேசிய ஊடகங்களில் உங்கள் செய்திகளுக்கு இடம் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருக்கக் கூடாது.

இன்று உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கண்டி டைம்ஸ் இணைய தளத்திற்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம். அதன் மூலம் உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் எட்டப்படலாம்.

உங்களின் ஊடக எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய நாம் அனைவரும் ஒன்றாக பிராத்திக்கின்றோம் எனவும் அவர்

Web Design by Srilanka Muslims Web Team