தேர்தல் முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்' - இம்ரான் கான் » Sri Lanka Muslim

தேர்தல் முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்’ – இம்ரான் கான்

Contributors
author image

Editorial Team

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் நீடிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் மிகுந்த சூழல் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை இந்த சூழல் நீடிக்கும். தேர்தலுக்கு முன்பாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நரேந்திர மோதி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கும்.

இந்தியா தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் எந்நேரமும் தயாராக உள்ளது என்று கூறினார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்

Web Design by The Design Lanka