10 வருடங்களாக சமூர்த்தி முத்திரை வழங்கப்படவில்லை.! - Sri Lanka Muslim

10 வருடங்களாக சமூர்த்தி முத்திரை வழங்கப்படவில்லை.!

Contributors
author image

Hasfar A Haleem

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம மக்கள் எவருக்கும் கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையெனக் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு, இக்கிராம மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, மட்டக்களப்பு நலன்புரி முகாமில் இருந்து மீண்டும் 2008 ஆம் ஆண்டு, தமது கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமது கிராமத்தில் எவருக்கும் இதுவரையில் சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையென இக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூழித் தொழிலையும் விறகு சேகரித்தலையும் பிரதானமாகக் கொண்ட இவர்கள் தமக்கான உணவு முத்திரை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து, பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள், மகஜர் கையளிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதுவரை அவை, சம்மந்தப்பட்டவர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும், அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில், திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகளும் அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தி, பாட்டாளிபுரம் கிராம மக்களுக்கு, சமுர்த்தி உணவு முத்திரையைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team