2019 ஆண்டுக்கான அலிகாரியன் விருது - Sri Lanka Muslim
Contributors
author image

ஊடகப்பிரிவு

2019 ஆண்டுக்கான அலிகாரியன் விருது வழங்கும் வைபவம் நேற்று காலை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று சிறப்பித்தார்.

கல்லூரியின் முதல்வர் எஸ்.ஏ.நஜீப் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் கல்விச்சாதனையாளர்கள் ஆளுநரினால் விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டதுடன் அலிகாரியன் கல்வி சமூகத்தினால் ஆளுநரின் சேவையினைப்பாராட்டி ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20190329-WA0005 IMG-20190329-WA0008 IMG-20190329-WA0012

Web Design by Srilanka Muslims Web Team