தேசிய சம்பளம், பதவியணி ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம்…. - Sri Lanka Muslim

தேசிய சம்பளம், பதவியணி ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம்….

Contributors
author image

Presidential Media Division

தேசிய சம்பளம், பதவியணி ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான எஸ்.ரனுக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் செயலாளராக முன்னாள் அமைச்சரவை செயலாளர் அநுர ஜயவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளான சீ.பி.சிறிவர்தன, கலாநிதி தமிதா டி சொய்சா, லலித் கன்னங்கர, ஜானக்க சுகததாச, சித்ராங்கனி வாகீஸ்வர, சந்ராணி சேனாரத்ன, கிங்ஸ்லி பெர்ணான்டோ, ஜீ.எஸ்.எதிரிசிங்க, எம்.சி.விக்ரமசேகர, வைத்தியர் பாலித அபேகோன், டி..அபேசூரிய, லெஸ்லி தேவேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.03.29

Web Design by Srilanka Muslims Web Team