28 சிங்கள நகரங்களில் ரிஷாட்டுக்கு எதிராக இனவாதிகள் கொந்தளிப்பு - Sri Lanka Muslim

28 சிங்கள நகரங்களில் ரிஷாட்டுக்கு எதிராக இனவாதிகள் கொந்தளிப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வில்பத்துக் காட்டை ரிஷாட் அழிக்கிறார் எனும் இனவாதக் கோஷங்களை முன்வைத்து இன்று (30.03.2019) நாடு பூராகவும் உள்ள 28 பிரதான சிங்கள நகரங்களில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உருவ பொம்மைகள், இனவாதக் கருத்துகளைக் கொண்ட பதாதைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் புகைப்படங்களை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னனெடுக்கப்பட்டது.

இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களே பெருமளவில் பங்குகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் போது இனவாத பௌத்த தேரர்களும் சிங்களக் காடையர்களுமே பங்குகொண்டிருந்தனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமே பங்குகொண்டிருந்தமை அதிர்ச்சிக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

28 நகரங்களில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களைக் கொண்ட நகரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியில் – வடக்கு முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு என்றுமில்லாதவாறு சிங்கள ஊடகங்களும் சிங்கள சமூக வலைத்தளங்களும் அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது.

எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் எதுவும் அறியாதவர்களாக எமது முஸ்லிம் சமூகம் இன்று இருந்துள்ளமை பெரும் ஆபத்துக்குரிய விடயமாகும்.

வடக்கு முஸ்லிம்களுக்காகவும் அந்த மக்கள் உட்பட தேசிய முஸ்லிம்களுக்காகவும் உயிரை துச்சமென மதித்து, இனவாதிகளுடன் மோதி வரும் ரிஷாட் பதியுதீனுக்கும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.

r r.jpg2 r.jpg2.jpg3 r.jpg2.jpg3.jpg6 r.jpg4

Web Design by Srilanka Muslims Web Team