தெரண ஊடகவியலாளரின் கேள்விகளும் அம்ஹர் மெளலவியின் தெளிவான பதில்களும் - Sri Lanka Muslim

தெரண ஊடகவியலாளரின் கேள்விகளும் அம்ஹர் மெளலவியின் தெளிவான பதில்களும்

Contributors
author image

Mujeeb Ibrahim

தொப்பி போடுவதில் தொடங்கியது தெரண ஊடகவியலாளர் சதுர அல்விஸின் கேள்வி….

இஸ்லாத்தை பற்றி இஸ்லாத்திற்கு வெளியே உள்ள மக்களிடம் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.

ஒரு சாரார் உண்மையாகவே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த கேள்விகளை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு சாரார் இனவாத, மதவாத கண்ணோட்டங்களோடு இஸ்லாத்தின் மீதான விமர்சன ரீதியான கேள்விகளை எப்போதும் ஏவிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இலங்கையில் தெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சதுர அல்விஸ் இனத்துவ ரீதியான போக்கினை கொண்டவர் என்ற பார்வை உண்டு.
இருந்த போதிலும் ஊடகவியலாளராக அவர் இஸ்லாம் தொடர்பிலும் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அஷ்ஷெய்க் அம்ஹர் மெளலவி அவர்கள் பதிலளித்த விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘நான் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன், அப்போதைய முஸ்லிம் தாய்மார் என்னை நன்றாக அவர்களது வீடுகளுக்கு அழைத்து உபசரிப்பார்கள், முஸ்லிம் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். நோன்பு காலத்தில் எனது வீட்டிற்கு கஞ்சி அனுப்புவார்கள்…. ஆனால் இப்போதைய முஸ்லிம் பெண்களின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு நிற ஆடைகளை அணிகின்றார்கள். முகத்தை மூடிச்செல்கிறார்கள்…

இந்த மாற்றம் எதனால் வந்தது ?’என்று எழுந்த கேள்வி முதல் வில்பத்து காடழிப்பு, ஜும்ஆ தினங்களில் ஹெல்மட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓடுதல், ரோட்டை பிடித்து சட்டவிரோத கட்டடங்கள் கட்டுதல், இனத்துவ அரசியல், மாடறுத்தல், அதிகம் பள்ளிவாயல்களை கட்டுதல் என பல்வேறு தளங்களில் நகர்ந்து ஈறாக ஏராளமான பிள்ளைகளை பெறுதல் வரை தனக்குள் இருந்த ஒட்டு மொத்த கேள்விகளையும் சதுர மஹத்மயா கொட்டி முடித்தார்.

இறைவனது அருளால் “சதுர மஹத்மயா” என்ற கனிவான விழிப்போடு மிக்க சாதுர்யமாக அம்ஹர் மெளலவி வழங்கிய தெளிவான பதில்கள் சதுரவை பல இடங்களில் உறையவைத்தது ( freezed).

அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல இறைவன் ஹஸ்ரத் அம்ஹரின் அறிவில் மென்மேலும் பரக்கத் செய்யட்டும்.

தேகாரோக்கியமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் அவருக்கு அருளட்டும்.

இந்த நேர்காணல் கண்டிப்பாக தமிழில் ஒலிவடிவம் கொடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

இந்தப்பணியினை Daily Ceylon, Ceylon Muslims அல்லது QTv போன்ற ஊடக சகோதரர்கள் முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த நேர்காணலின் இணைப்பு இதோ…

Web Design by Srilanka Muslims Web Team