அக்கரைப்பற்றில் வாழ்வோதய உபகரணங்கள் வழங்கி வைப்பு » Sri Lanka Muslim

அக்கரைப்பற்றில் வாழ்வோதய உபகரணங்கள் வழங்கி வைப்பு

IMAG2369

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் 08 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஜீவனோபாய ஊக்குவிப்புப் பொருட்களான,தையல் இயந்திரங்கள், மாவிடிக்கும் இயந்திரங்கள், துவிச்சக்கரவண்டிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன,

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம்,திறன் அபிவிருத்தி அமைச்சரும், தேசியத்தலைவரும் ஆகிய அல்.ஹாஜ்.றிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார், பிரதி அமைச்சர்  அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் எம்,எஸ்,எஸ் .அமீர்அலி. பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்,எம்,எம்,இஸ்மாயீல், இஷாக் றஹுமான் ,கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நிடா போன்றோர் விசேட அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாகவும் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

அக்கரைப்பற்று மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களான. எம்.என்.எம்.நபீல், திரு.எம்,ஐ.ஏ,ஆர்,புஹாரி, ஹனீபா மதனி, .ஏ,எல்,மர்ஜூன்.  பாசித் போன்றோர் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர்.றசான் ஹாபிஸ்,கிராமசேவகர்கள்.ஏனைய அரச ஊழியர்கள்,ஊடகவியலாளர்கள்,பயனாளிகள் போன்ற பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியதைக் காண முடிந்தது,

அமைச்சர் தனது உரையில்
அம்பாரையில் நீண்டகாலமாக தீர்க்கப் படாமல் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் நடவடிக்கை எடுக்கும், இம்மாவட்ட மக்களின் நலன்கருதியே தேசியப் பட்டியல் எம்பி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களில் ஒன்றிற்கு ஏன் ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளரை நியமிக்கக்கூடாது.இவ்விடயத்தில் இங்கு ஆட்சி நடத்தியவர்கள் கோட்டைவிட்டு விட்டனர்.நாம் வவுனியா மாவட்டச் செயலாளராக ஒரு முஸ்லிமை நியமித்தோம்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வருகையின் பின்னரே ஏனைய கட்சிக்காரர்கள் விழிப்படைந்து உள்ளனர்,
அபிவிருத்திக்கான கட்சியல்ல உரிமைக்கான கட்சி எனக் கோசமிட்டவர்கள்,தம்மைத் தற்போது மாற்றியுள்ளனர்.

எமது கட்சியின் துரித வளர்ச்சியைக்கண்டு ஏனையோர் கிலிகொண்டு,ஆர்ப்பாட்டம்,கொடும்பாவி எரிப்பு,வில்பத்து அழிப்பு என்று போலி ஊடகப் பிரசாரம் என்பவற்றை செய்து வருகின்றனர்,எமது பயணம் புனிதமானது,பயணம் தெளிவானது.யாரின் பதவியையும் பறிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை.இலங்கையில் எங்கு ஒரு அநீதி இடம்பெற்றாலும் எமது தலைமை அங்கு நிற்கும்.எமக்கு அல்லாஹ்வின்அருள் இருக்கும்வரை எம்மை யாராலும் அழிக்க முடியாது.பாராளுமன்றின் இருக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோளாகும்,எனத் தெரிவித்தார்.

IMAG2344 IMAG2345 IMAG2349 IMAG2365 IMAG2369 IMAG2371

Web Design by The Design Lanka