யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு - Sri Lanka Muslim

யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றச் சென்றதை அடுத்து அவரது ஓய்வுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டார்.பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த திங்கட்கிழமை(1) யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் மாலை பதவியேற்பு இடம்பெற்றது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அவரது பதவியேற்பு நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பிராந்தியங்களுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team