இந்த நாட்டின் ஆட்சிமாற்றத்திற்கு ஊடகவியலாளர்களினதும். ஊடகங்களினதும் பங்களிப்பு அளப்பரியது - Sri Lanka Muslim

இந்த நாட்டின் ஆட்சிமாற்றத்திற்கு ஊடகவியலாளர்களினதும். ஊடகங்களினதும் பங்களிப்பு அளப்பரியது

Contributors
author image

P.M.M.A.காதர்

ஊடகவியலாளர்களின் பணி மிகவும் கடினமானது புனிதமானது கஷ்டமானது இவ்வாறான இந்தத் துறையை மிகவும் விருப்பத்துடன் செய்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் இவர்களுக்கு கூலி கொடுப்பதாக இருந்தால் அதை அளவீடு செய்ய முடியாது.

ஊடகவியலாளர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஊடகங்களின் உரிமையாளர்கள் ஒவ்வொரு கொள்கை உள்ளவர்களாக இருக்கின்றார்கள் செய்யாத தவறுகளுக்காக தண்டணை வழங்குபவர்களாக இருக்கின்றார்கள் என அமைச்சர் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடாத்திய் “கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது விழா”; ஞாயிற்றுக்கிழமை (2019-03-31)கல்முனை ஆஸாத் பிளாசா வாவேற்பு மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;:- சில ஊடகவியலாளர்கள் தங்களுடைய மனச்சாட்சிப்படி எழுதுவதற்கு பேசுவதற்கு வாசிப்பதற்கு முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.

ஊடவியாளர்களிடத்திலே ஊடக தர்மம் இருந்தாலும் ஊடகங்களிடத்தில் ஊடக தர்மம் வருகின்ற போதுதான் அது சமாந்திரமாக இரண்டும் சேர்ந்ததாக வருகின்ற போதுதான் இந்த நாட்;டின் சமாதானம்,சமத்தவம்.சகவாழ்வு,நிம்மதி இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி என்பன நமக்குக் கிடைக்கும்.

இந்த ஊடகங்களினாலும்,ஊடகவியலாளர்களினாலும் எதையும் செய்யலாம் என்று பேசுவார்கள் அந்த வகையிலே இந்த நாட்டின் ஆட்சிமாற்றத்திற்கும் இந்த ஊடகவியலாளர்களினதும்.ஊடகங்களினதும் பங்களிப்பு அளப்பரியது.அதே போன்று இந்த ஆட்சியைத் தொலைக்க வேண்டும் என்றும் இந்த ஊடகங்களின் செயற்பாடுகள் மிகவும் வேகமாக செயற்படுகின்றது.

எனவே ஆட்சிமாற்றங்கள் வருவதனால் பல இனங்கள் சேர்ந்து வாழ்கின்ற இந்த சின்ன நாட்டிலே நாங்கள் எதிர்பார்க்கின்ற நிம்மதி,பொருளாதார அபிவிருத்தி, பொருளாதார எழுச்சி,இந்த நாட்டின் எதிர்காலம் என்பன சிறப்பாக அமையுமா என்ற கேள்விகளும் எம்முன்னால் இருக்கிறது.

முப்பது நாற்பது வருடங்களாக இந்த நாட்டிலே யுத்தம் நடந்து முடிந்திருக்கின்றது.இந்த யுத்ததுடைய வடு இன்னும் ஆறவில்லை தமிழ் சகோதரர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும்,சிங்களவர்களுமாக எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

இந்த யுத்த்திற்கான காரணம் என்ன என்று தேடிப்பார்க்கின்ற போது அதன் பின்னாலும் ஒருசில அரசியல் தலைமைத்துவங்கள் விட்ட தவறுகள்,சிலர் விட்ட தவறுகளை தலைமைத்தவங்கள் கண்டு கொள்ளாமல் இருந்த காரணங்களால்தான் இந்த யுத்தத்திற்கு முகம் கொடுத்த இந்த நாடும் மக்களும் சீரழிந்திருக்கின்றது என்றார்.

இந்த விருது விழாவில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனதின் உறுப்பினர்கள் 18 பேரும்,அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள ஊடகவியலாளர்கள் 28 பேரும்.சமூக சேவைக்காக 6 பேருமாக 52 பேர் பொன்னாடை போர்த்தி,மாலை.பதக்கம் என்பன அணிவித்து விருதும்.சாண்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இங்கு விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறு;ப்பினர்களான தயாஸ்ரீ ஜயசேகர,பாலித தேவப்பெரும, ஸ்ரீயானி விஜய விக்கிரம,ஏ.எல்.எம்.நஸீர், பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team