கிழக்கிலங்கையில் ERCP சத்திர சிகிச்சை முதல் முதலில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் - Sri Lanka Muslim

கிழக்கிலங்கையில் ERCP சத்திர சிகிச்சை முதல் முதலில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

Contributors
author image

S.Ashraff Khan

கிழக்கிலங்கையில் ERCP சத்திர சிகிச்சை முதல் முதலில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் உள்ளிட்ட டாக்டர் குழுவினரால் நேற்று முன்தினம் (01) நடைபெற்றது.

ERCP என்பது Endoscopic retrograde cholangiopancreatography அதாவது Endoscopy, Fluoroscopy மூலம் பித்தப்பைக் குழாய் சதையிக் குழாயில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சை வழங்குவதற்குமான சிகிச்சை முறையாகும்.

பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைப்பு மற்று சதையியின் தலைப் பகுதியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நமது பகுதி நோயாளிகள் கொழும்பு,களுபோவில, ராகம வைத்தியசாலைகளுக்கு அனுப்பப் படுவததைக் குறைப்பதற்காகவே கல்முனை AMH வைத்தியசாலையில் ERCP எனும் சத்திர சிகிச்சை முறை வெற்றிகரமாக இன்று நடைபெற்றது.

பித்தப்பைக் குழாயில் பித்தப்பைக் கல் அடைபட்டு கண் மஞ்சளாகி வந்த நோயாளி ஒருவருக்கே இவ் அரும் பெரும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு வெற்றியாக நிறைவேறியது.

இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ERCP சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும்இச் சத்திர சிகிச்சையை இங்கு மேற்கொள்ள பெறுமதி வாய்ந்த உபகரணங்களைப் பெற்றுத்தந்த வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் உள்ளிட்ட டாக்டர் குழுவினர் தெரிவித்தனர்.

MG_1554211573349 MG_1554211581510

Web Design by Srilanka Muslims Web Team