வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் மோட்டார் வாகன ஊர்வலம் - Sri Lanka Muslim

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் மோட்டார் வாகன ஊர்வலம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான இனவாதிகளின் மற்றுமொரு செயற்பாடு தென் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் பவனியாக பதாதைகளை ஏந்திய வண்ணம் நீண்ட தூரம் எதிர்ப்பு ஊர்வலத்தை வெளிப்படுத்துவதே அந்த மற்றுமொரு செயற்பாடாகும்.

அதன்படி முதலாவது மோட்டார் பவனி தென்மாகாணத்தின் பலப்பிட்டியிலிருந்து காலிவரை இடம்பெற்றுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் இந்த ஊர்வலத்தில் பங்குகொண்டுள்ளன.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராகவும் அம்மக்களின் மீள்குடியேற்றத்தை முனைப்புடன் செயற்படுத்தி வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகவும் இனவாதத்தை தூண்டும் கோஷங்களை எழுப்பி குறித்த ஊர்வலத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இனவாத வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆண்களும் பெண்களுமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள 315 போலி இனவாத சிங்கள முகநூல்களில் இன்றும் பல புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

நிமிடத்திற்கு நிமிடம் அந்த முகநூல்களில் பதிவேற்றங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.
இன்று காலை வேளைக்குள் மாத்திரம் பல கட்டுரைகளும் புகைப்படங்களும் சிங்களத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இனவாதப் போக்கைக் கொண்ட சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களில் மிகத் தீவிரமாக செயற்படுவதுடன் ஏனைய நடுநிலையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் உள்ள எண்ணப்பாட்டை மாற்றுகின்ற அளவுக்கு அவர்களின் பிரச்சாரமும் மேலோங்கியுள்ளது.

மேற்படி மோட்டார் வாகன ஊர்வலமானது தெற்கைத் தாண்டி வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள சிங்கள கிராமங்களை அண்மித்ததாக மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்களின் முகநூல் பின்னூட்டல்களிலிருந்து அறிய முடிகின்றது.

w w.jpg2 w.jpg2.jpg4 w.jpg7 w.jpg77 w5 w6 w66

Web Design by Srilanka Muslims Web Team