சாதாரண தரப் பரீட்சையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் விநியோகம் ஆரம்பம் - Sri Lanka Muslim

சாதாரண தரப் பரீட்சையின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள், முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகைதந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித குறிப்பிட்டுள்ளார். சான்றிதழ் ஒன்றுக்கு 600 ரூபா கட்டணம் அறவிடப்படும்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்களின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடவை நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இப்பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 71.66 வீதமானோர் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team