அரசியல் பழிவாங்கல்: போராடி பணிப்பாளா் பதவியும் நிலுவையும் பெற்ற ஜலீல் அதிபா் » Sri Lanka Muslim

அரசியல் பழிவாங்கல்: போராடி பணிப்பாளா் பதவியும் நிலுவையும் பெற்ற ஜலீல் அதிபா்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கப்பட்ட அதிபர் ஒருவருக்கு பணிப்பாளராக பதவியும் உயர்வும் 6 இலட்சம் ரூபா நிலுவைப் பணத்தினையும் கல்வியமைச்சு வழங்கியுள்ளதாக தெமட்டக்கொட அல் ஹிதாய வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஜலீல் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்ரும் காலம் சென்ற எம்.எச்.முஹம்மத் அவர்களின் உதவியுடன் பல இடர்பாடுகளுக்கும் நீதிமன்றத்தின் வழக்குகளிலும் வாதாடி ஒன்றரை ஏக்கர் நிலத்தில் குப்பியாவத்தையில் பெற்று இரண்டு மாடிக் கட்டிடத்தைக் கொண்டு அல் ஹிஜ்ரா எனும் பாடசாலையை ஆரம்பித்தார்.

அத்துடன் அதனை வித்தியாலயமாக தரமுயர்த்தினார். விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம் ஆசிரியர் விடுதி போன்றவற்;றை அங்கு உருவாக்கினார். அப்போதைய காலத்தில் கல்விச்சேவை 11ஆம் தரத்திற்கு நேர்முகப் பரீட்சைக்கு சென்றபோது முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மதின் அரசியல் ஆதரவாளன் என்ற காரணத்தினால் இவருக்கு அப்பதவி கிடைக்க மறுக்கப்பட்டது.

அன்மையில் நல்ஆட்சி மாற்றம் ஏற்பட்டதினால் அவருக்கு ஏற்பட்ட அநீதிகளை உரிய ஆவணங்களுடன் அவர் அரசியல் பழிவாங்கல் கமிட்டிக்குச் சமர்ப்பித்திருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய இலங்கை கல்வி நிர்வாகச் சேவைக்கு பதவி உயர்தப்பட்டார். அது மாத்திரமின்றி உரிய காலத்திற்குரிய சம்பளம் நிலுவையை பணமாகவும் கிடைக்கப்பெற்றுள்ளமை. ஒரு விசேட அம்சமாகும்.

இவர் அதிபராக 1ஆம் தரத்திற்குரியவர், என்ற காரணத்தினால் ;இவருக்குரிய வாகனப் பத்திரம் கூட அப்போது கிடைக்கப் பெற்றது. இவர் நீண்டகாலமாக தனது சேவையை அரசகரும மொழிகள் திணைக்களத்துடன் சேர்ந்து அரச ஊழியர்களுக்கு மொழி அறிவைப் பெற்றுக் கொடுத்தார். மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் ஒரு சமுக சேவை ஊழியராவர். இவர் மொறட்டுவைப் மோதர அரபா வித்தியாலயத்தின் ;பழைய மாணவராவார்.

Web Design by The Design Lanka